மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனின் தயாரிப்பில் உருவாகும் ‘ஜென்டில்மேன்-2‘ படத்தின் நாயகியாக நயன்தாரா சக்ரவர்த்தி என்பவர் நடிக்கவிருக்கிறார்.
‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், தற்போது ‘ஜென்டில்மேன்-2‘ என்ற பிரம்மாண்ட படத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே இப்படத்தின் இசை அமைப்பாளராக கீரவாணியை அறிவித்திருந்தார் குஞ்சுமோன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கப் போவதாகவும் செய்திகள் பரவின.
தற்போது அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஹீரோயினின் பெயரை அறிவித்துள்ளார் குஞ்சுமோன்.
சூப்பர் ஸ்டார்களான ரஜனி, மம்முட்டி, மோகன்லால் ஆகியோருடன் 30-க்கும் அதிகமான மலையாளம், தெலுங்கு, தமிழ்ப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்ற கேரளாவை சேர்ந்த நயன்தாரா சக்ரவர்த்திதான் அந்த அறிமுக கதாநாயகி.
“இன்னொரு கதாநாயகியும் படத்தில் உள்ளார். அது யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும்…” என்றும் சஸ்பென்ஸ் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன்.
அந்த ஹீரோயின் யார் அறிந்து கொள்ள என்று ஆவலோடு காத்திருக்கிறது திரை உலகம்.
மேலும் படத்தின் இயக்குநர், ஹீரோ, மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் யார் என்ற அறிவிப்புகளும் விரைவில் வெளிவருமாம்.









