சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல்நலக் குறைவால் ரத்து செய்யப்பட்ட ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இப்போதைக்கு இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
ரஜினி தனது மருத்துவ சோதனைகளுக்காக மிக விரைவில் அமெரிக்கா செல்லவிருக்கிறார். எந்த மருத்துவமனையில் சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்தாரோ அதே மருத்துவமனையில் சில நாட்களுக்கு உள் நோயாளியாக அட்மிட் ஆகி முழு உடல் பரிசோதனை செய்யவிருக்கிறார். அவருடைய குடும்பத்தினரும் அவருடன் செல்லவிருக்கிறார்கள்.
இனி “அந்தப் பரிசோதனையை முடித்துக் கொண்டு திரும்பி வரும் ரஜினி என்றைக்கு “நான் ரெடி.. ஷூட்டிங் போலாம்..” என்று சிக்னல் கொடுக்கிறாரோ.. அன்றைக்குத்தான் ‘அண்ணாத்த’ படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங்…” என்று படத்தின் தயாரிப்பாளர்களான ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனமே சம்பந்ததப்பட்டவர்களுக்குத் தெளிவுபடுத்திவிட்டது.
இயக்குநர் ‘சிறுத்தை’ சிவாவும் ரஜினிக்காக எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டார்.
இனிமேல் அவரது ரசிகர்களும் காத்திருக்க வேண்டியதுதான்..!