எவர்க்ரீன் s.சண்முகம் தயாரிப்பில் ஆர்.வி.ஆர். இயக்கத்தில் உருவான ‘அஞ்சுக்கு ஒண்ணு’ திரைப்படத்திற்கு தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இதைப் பற்றி இயக்குநர் பேசும்போது, “இப்படம் கட்டிட தொழிலாளர்களாய் பணிபுரியும் ஐந்து இளைஞர்களுக்கும் ஒரு பெண்ணுக்குமான கதை, அவர்களின் வாழ்க்கையை மிக மிக எதார்த்தமாக பதிவு செய்துள்ளேன். ஆனால் தணிக்கை குழுவினர் எதற்கெடுத்தாலும் கட் கொடுக்கிறார்கள். இது வருத்தமாக உள்ளது.
உதாரணமாக கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் விலைமாதுவிடம் என் கதையின் நாயகர்கள் இருப்பது போன்ற காட்சியில் அந்தப் பெண்ணை அணைக்குமாறு கூட காட்சி வைக்காமல் ஆணுறை மட்டும் சிதறி கிடக்குமாறு காட்சி வைத்திருந்தேன். இதற்கும் கட் கொடுக்கிறார்கள். நாயகியின் தொப்புள் பகுதிக்கு அருகில் நாயகன் தன் கன்னத்தை கொண்டு செல்லும் டூயட் காட்சியிலும் கட் கொடுக்கிறார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் கட் கொடுத்தால் எப்படித்தான் படம் எடுப்பது..?
இத்திரைபடத்தை பாருங்கள்.. நிச்சயமாக எந்தவொரு இடத்திலும் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் எந்தக் காட்சியும் அமைந்திருக்காது. நிச்சயமாக இத்திரைப்படம் மக்கள் அனைவராலும் ரசிக்கும் வண்ணம் இருக்கும்.
ஏன் தணிக்கைக் குழுவினரே, ‘இந்த மாதம் நாங்கள் பார்த்த நாற்பது படத்திலேயே இதுதான் மிகச் சிறந்த படம்’ என்று கூறினார்கள். எனவே இத்திரைப்படத்திற்கும் எங்கள் குழுவிற்கும் உங்கள் அன்பும், ஆதரவும் தேவை.” என்கிறார் இயக்குநர்.
.பேனர் – பேரண்ட்ஸ் பிக்சர்ஸ்
தயாரிப்பு – எவர்கிரின் எஸ். சண்முகம்
இனை தயாரிப்பு – எஸ்.எஸ். ராஜ்
இயக்கம் – ஆர்.வி.ஆர்.
இசை – சாகித்யா.ஆர்
ஒளிப்பதிவு – அசோகன் (எ) நந்து
படத்தொகுப்பு – வி . பழனிவேல்
பாடல்கள் – கானா பாலா , தொல் காப்பியன், கவிக்குமார்
நடனம் – தீனா , காதர் , அருன்குமார்
ஸ்டில்ஸ் – அருண்
டிசைன் – சிவா
தயாரிப்பு மேற்பார்வை – ரஞ்சித் கே. ஆர். பழனியப்பன்
மக்கள் தொடர்பு – எம்.பி. ஆனந்த