K.R.R. Film Company தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படம் ‘அஞ்சேல்.’
இந்தப் படத்தின் ஹீரோவாக அர்ஜுன் காபிகாட் நடிக்கிறார். ஹீரோயின்களாக ஆயிஷா அசிம், மற்றும் ரேயா நடிக்கிறார்கள். மேலும், ராஜேஷ் ராகவ், சுமன், நாகி நாயுடு, ‘மொட்டை’ ராஜேந்திரன், நவீன் கோபிநாத் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவு – அப்துல் ஷக்கிர், கலை – பாவா, நடனம் – ரேகா, விஜய், சண்டை பயிற்சி -ரன் ரவி, விஜய் ஜாகுவார், ஸ்டில்ஸ் – ஜார்ஜ் கோலான், சந்தோஷ், மக்கள் தொடர்பு – ‘மதிஒளி’குமார், வழுர் Jose, மக்கள் தொடர்பு உதவி – D.R. Baleshwar & Winsun, பாடல்கள், இணை இயக்கம் – நந்துதாசன் வள்ளுவன், தலைமை இணை இயக்கம் – யாளி. கதை, திரைக்கதை, வசனம் ராஜேஷ் ராகவ், இயக்கம் – ஷிபு சேகர், A.M. ரஷித்.
இந்தப் படத்தின் பூஜை நேற்று காலை, வடபழனி ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள புதிய விநாயகர் கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த பூஜை நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், நடிகர் ஹரிகுமார், கோபிநாத், அரிஸ்ரீ அசோகன், ஜாகுவார் தங்கம், காளையப்பா குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கவிஞர் நந்துதாசன் வள்ளுவன் வரவேற்புரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் ‘அஞ்சேல்’ திரைப்படம் வெற்றிபெற வாழ்த்தி பேசினர்.
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (GUILD) செயலாளர் ‘மதி ஒளி’குமார் மற்றும் இணை பி.ஆர்.ஓ. டி.ஆர்.பாலேஷ்வர் ஆகியோர் நன்றி கூறினார்கள்.