full screen background image

‘அஞ்சான்’ முதல் 3 நாள் வசூல் 30 கோடி..!

‘அஞ்சான்’ முதல் 3 நாள் வசூல் 30 கோடி..!

என்னதான் எதிர்மறை விமர்சனங்களை இணையத்தில் எழுதிக் குவித்தாலும் ‘அஞ்சான்’ படம் ஓஹோவென்று ஓடுவது என்பது மட்டும் உண்மை..!

‘அஞ்சான்’ படம் தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு சாதனையை படைத்திருப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களே செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

படம் ரிலீஸான முதல் மூன்று நாட்களிலேயே அந்தப் படத்தின் மொத்த வசூல் 30 கோடியாம்..! இப்படியான வசூலை இதுவரையில் வேறெந்த படமும் கிட்டவில்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்..

தியேட்டர் உரிமையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை.. ஆனால் 1500 தியேட்டர்களில் ரிலீஸ் என்றால் இதுவும் ஒரு சாதனைதான்..! இத்தனை தியேட்டர்கள் கிடைக்கிறதென்றால் தயாரிப்பாளர்களின் திறமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..!

படத்தைத் தயாரித்தால் மட்டும் போதாது.. கொஞ்சம் வியாபாரத் திறமையும் வேண்டும்..!

Our Score