‘அஞ்சல’ படத்தின் இசை நாளை வெளியீடு

‘அஞ்சல’ படத்தின் இசை நாளை வெளியீடு

நடிகர் விமலின் படங்களுக்கு விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், மற்றும் ரசிகர்கள் இடையே என்றுமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.  சகல தரப்பினரையும், திருப்தி செய்யும் படமாக அவரது படம் இருக்கும் என்ற கணிப்பை அவர் என்றுமே பொய்யாக்க விட்டதில்லை.

unnamed (4)

அந்த வகையில் தங்கம் சரவணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'அஞ்சல' திரைப்படம் திரையுலகில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  பிரபல  சண்டை பயிற்சி இயக்குனர்  திலிப் சுப்பராயன் தயாரித்திருக்கும், இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக, நந்திதா நடித்திருக்கிறார்.

ரசிகர்களைக் கவரும் வகையில் பல அம்சங்கள் படத்தில் இருந்தாலும் பிரபல  இசையமைப்பாளர் கோபி சுந்தர்  படத்தின் இசை அமைப்பாளர் என்பதும் படத்திற்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய பலம். ‘Bangalore days’, ‘என்னு நிண்டேமொய்தீன்’ ஆகிய மலையாள படங்களின் இசை மூலம் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட இசை இவருடையது.

'அஞ்சல' படத்தின் பாடல்கள் நிச்சயம் ரசிகர்களின் ரசனைக்கேற்ப இருக்கும். நாளை நவம்பர் 19-ம் தேதி ‘அஞ்சல’ படத்தின் இசை வெளியீடு நடக்கவுள்ளது. அதை தொடர்ந்து வெகுவிரைவில் ரசிகர்களை சந்திக்க வருகிறார் 'அஞ்சல” என்றார் தயாரிப்பாளர் திலிப் சுப்பராயன்.

இந்த  'அஞ்சல'  படத்தை Auraa சினிமா மகேஷ் கோவிந்தராஜ், தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.