full screen background image

“ஆண்ட்ரியாவுடனான காதல்தான் எனது முதல் காதல் அனுபவம்..” – இசையமைப்பாளர் அனிருத்தின் பேட்டி..!

“ஆண்ட்ரியாவுடனான காதல்தான் எனது முதல் காதல் அனுபவம்..” – இசையமைப்பாளர் அனிருத்தின் பேட்டி..!

கடந்த வருடம் திரையுலகை அசைத்துப் பார்த்த.. பொறாமைக் கண்ணுடன் பார்க்க வைத்த ஒரு விஷயம் அனிருத்-ஆண்ட்ரியா முத்த புகைப்படங்கள்தான். மிக அழுத்தமாக உதட்டோடு உதடு கவ்வி அனிருத்தும், ஆண்ட்ரியாவும் அளித்திருந்த அந்த காதல் முத்தம் திரையுலகத்தினரை ஒரு கணம் திகைக்க வைத்து பின்பு சிரிக்கவும் வைத்தது.

மற்றவர்களை போல “அது நாங்களில்லை.. மார்பிங்..” என்று மழுப்பாமல் இருவருமே “அது நாங்கள்தான்.. நாங்கள் காதலித்தபோது எடுத்த படம் அது. இப்போது எங்களுக்குள் காதல் இல்லை. பிரிந்துவிட்டோம்…” என்று சொல்லி அந்த சர்ச்சைக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்திருந்தார்கள்.

இப்போது ஆண்ட்ரியாவுடனான காதல் வாழ்க்கையைப் பற்றி தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை தற்போது எழுதி வரும் ‘குமுதம்’ பத்திரிகையில் சொல்லியிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

அதில், “என் வாழ்க்கையில் நடந்த ஒரே காதல்ன்னா அந்த ஒண்ணே ஒண்ணுதான். நான் வளர்ந்து விட்டதா என்னை நானே உணர்ந்த நேரம் அது. அப்ப வந்த ஒரு உணர்வுன்னுதான் அதை நான் சொல்வேன். ஆனால், அதை இப்போ யோசிக்கும்போது காதல் போல தெரியலை..

ஒரு பத்தொன்பது வயது பையன் வாழ்க்கைல பெருசா என்னத்தை உணர்ந்திர முடியும்..? ‘முளைச்சு மூணு இலை விடலை’ன்னு பெரியவங்கள நம்மள பத்தி பேசுற வயசுல, நாம முழு மனுஷனாகிட்டோம்ன்னு யார் நம்பினாலும் அது தப்பு. நான் நம்பினாலும் அது தப்புதான்.

எனக்குள் உருவானது ஏதோ ஒரு இனம் புரியாத பீலிங்.  அதுவரைக்கும் ஒரு பெண்ணோட நேரடியாக ஏற்படாத நட்பு முதன்முதலாக ஏற்பட்டதும் ஒரு உறவை உருவாக்க முயற்சித்துவிட்டது. நானும் உண்மையா அதற்கு ஏதேதோ முடிச்சுப் போட்டு அவசரப்பட்டு ஒரு உருவம் கொடுத்துப் பார்த்துட்டேன்.

உண்மையாகவே சொன்னால் எனக்கும் ஆண்ட்ரியாவுக்கும் இருந்தது காதல் இல்லை. இன்பாச்சுவேஷன்னும் இல்லைன்னு இப்போ தோன்றுகிறது. பார்த்தோம். பேசினோம். அதற்குள் ‘ஏதேதோ’ நடந்து முடிந்துவிட்டது.

என்னோட முதல் ஆல்பம் ரிலீஸாகி சந்தோஷத்தை அனுபவிக்கலாம்னு இருந்தப்ப எனக்கே தெரியாம நெட்ல லீக் ஆகி அதிர்ச்சியைக் கொடுத்தது. அதுபோல ஆண்ட்ரியா போட்டோஸும் எனக்கே தெரியாம நெட்ல வேகவேமா பரவி என் பெயரையே கெடுத்துவிட்டது. அனிருத் இரண்டு விஷயத்துல பிரபலமாkணும் என்பது ஏற்கெனவே எழுதப்பட்ட விதி..” என்று சொல்லியிருக்கிறார் அனிருத்.

இது பற்றி அனிருத்தின் அம்மா லட்சுமி சொல்கையில், “எங்க குடும்பத்தைப் பொறுத்தளவில் அன்னிக்கு அது ஒரு கெட்ட நேரம். எப்பவோ அவன் செய்த விளையாட்டுத்தனமான காரியம் பெரிய பூதம் போல வளர்ந்துவிட்டது. அதுக்கு அவனோட பாப்புலாரிட்டியும் ஒரு காரணம். அவன் அந்தளவுக்கு பேமஸாக இல்லையென்றால் இந்தளவுக்கு சர்ச்சைக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும். அவன் சங்கடமாக வந்து நின்றபோது, நாங்க பெற்றோர் ஸ்தானத்தில் நின்று அவனுக்கு ஆறுதல் கொடுத்தோம்..” என்றார்.

காதலும் இல்லை.. இனக்கவர்ச்சியும் இல்லைன்னா.. அப்புறம் என்னதாங்க அது..?

 

Our Score