போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா..!

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா..!

பவானி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கமல்  போரா  புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நடிகரை ஆண்ட்ரியா போலீஸ் உயரதிகாரியாக நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆண்ட்ரியாவுடன்  ஜே.கே.,  அஷ்தோஷ்  ராணா,  கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா,  ‘ஆடுகளம்’  நரேன்  உள்ளிட்ட  பலர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை இயக்குநர் ‘தில்’  சத்யா  இயக்குகிறார்.  இவர்  கன்னடத்தில்  ‘தில்’  என்ற மாபெரும் வெற்றி  படத்தை  இயக்கியவர்.  மேலும்  பல  படங்களை  இயக்கிய  அனுபவம் கொண்ட இவர், ‘ராஜ் பகதூர்’  உள்ளிட்ட  சில  படங்களை  தயாரிக்கவும் செய்திருக்கிறார். கன்னடத்தில்  150  படங்களுக்கும்  மேல்  நடன  இயக்குநராகவும்  இவர் பணியாற்றி இருக்கிறார்.

நடிகை ஆண்ட்ரியா இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கவுள்ளார். இவரது கதாபாத்திரம் போலீஸ் உயரதிகாரியாக அமைந்துள்ளதாம். ஆக்‌ஷன்,  திரில்லர்,  பேண்டஸி என வித்தியாசமான கதைக் களத்துடன் இந்தப் படம்  உருவாக  இருக்கிறது.

இந்தப் படத்தின்  படப்பிடிப்பு  இன்று  காலை சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் ஆண்ட்ரியா உள்ளிட்ட படக் குழுவினர்  பலரும்  கலந்து  கொண்டனர்.

சென்னை, கொச்சின், பரோடா, ஜெய்ப்பூர்  உள்ளிட்ட  பல  இடங்களில்  இதன்  படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.