நடிகை ஆண்ட்ரியாவின் நடிப்பைவிட அவரது பாடகி வேஷம்தான் இப்போது கோடம்பாக்கத்தில் அதிகம் பேசப்படுகிறது.. அம்மணி நடிப்பைவிட பாடுவதில் ஆர்வமாகவே இருக்கிறார். அதே நேரத்தில் இசையமைப்பதிலும் திறமையுள்ளவர்தானாம்..
இது வேறு இயக்குநர்களுக்குத் தெரியாமல் போனாலும் இயக்குநர் ராமின் கண்களில் பட்டுவிட்டதாம். ராம் இயக்கி வரும் ‘தரமணி’ என்ற படத்தில் ஆண்ட்ரியாவும் நடித்து வருகிறார். அப்போது ஆண்ட்ரியா இசையமைத்து பாடியிருந்த ஒரு ஆல்பம் சாங்கை கேட்டு அசந்து போன ராம், அதை அப்போதே தனது படக் குழுவினரை வைத்து ஆல்பத்திற்கேற்றாற்போல் விஷூவல்ஸை அந்த ரயில்வே ஸ்டேஷனிலேயே படமாக்கிவிட்டார்..
அதை அவங்களே பார்த்துக்கிட்டா எப்படி..? ஆண்ட்ரியாவின் புகழ் பரவ வேண்டாமா..? நாளை மாலை 6 மணிக்கு பிரசாத் லேப்பில் அதன் வீடியோ பிரதியை வெளியிடப் போறாங்க. பத்மபூஷன் கமல்ஹாசன் இதனை வெளியிட பத்மஸ்ரீ பட்டத்தைத் தூக்கியெறிந்த பாரதிராஜா பெற்றுக் கொள்ள இருக்கிறார்..!