full screen background image

இன்றைய ரிலீஸ் படங்கள் – பிப்ரவரி 7, 2014

இன்றைய ரிலீஸ் படங்கள் – பிப்ரவரி 7, 2014

இன்று பிப்ரவரி 7, 2014 ரிலீஸாகியிருக்கும் திரைப்படங்களின் லிஸ்ட் இது :

1. புலி வால்

puli-vaal

மேஜிக் பிரேம் நிறுவனம் சார்பில் ராதிகா சரத்குமாரும், லிஸ்டின் ஸ்டீபனும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா, சூரி, தம்பி ராமையா நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு போஜன் கே.தினேஷ், இசை ரகுநந்தன், எடிட்டிங் கிஷோர். எழுதி இயக்கியிருப்பது ஜி.மாரிமுத்து. இது ஒரு மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்..

2. பண்ணையாரும் பத்மினியும்

Pannaiyarum Padminiyum

விஜய் சேதுபதி ரசிகர்கள் மட்டுமின்றி, குறும்பட மாற்று சினிமா ஆதரவாளர்களும் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படம் இது. 

பண்ணையாரும் பத்மினியும் என்ற பெயரில் குறும்படமாக எடுக்கப்பட்டு மிக மிக பிரபலமானது இந்தப் படத்தின் கதை. விஜய் சேதுபதி ஹீரோவாகவும்,  ஜெயபிரகாஷ் பண்ணையாராகவும் நடித்திருக்கிறார்கள். பீரியட் படம் என்பதோடு பிரீமியர் பத்மினி காரை வைத்திருக்கும் ஒரு பண்ணையாருக்கும், அவரது டிரைவருக்கும் இடையிலான நட்புதான் இந்தப் படத்தின் கதை..

ஐஸ்வர்யா ஹீரோயினாகவும், துளசி பண்ணையாரின் மனைவியாகவும் நடித்திருக்கிறார்கள். கவிஞர் வாலியின் பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். எழுதி, இயக்கியிருப்பவர் எஸ்.யு. அருண்குமார்..

சமீபத்தில் வெளிவந்த ரம்மி தோல்வியடைந்துள்ள நிலையில் இப்படத்தின் ரிசல்ட்டை அறிய விஜய் சேதுபதியும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.. 

3. கோவலனின் காதலி

kovalanin-kadhali_m

குட்டே பிலிம்ஸும், ஜீவன் பிக்சர்ஸும் இணைந்து தயாரித்திருக்கும் படம் இந்த கோவலனின் காதலி. 

திலிப்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக கிரண்மை, நவ்தீப் கபூர் நடிச்சிருக்காங்க. இவர்களுடன் கஞ்சா கருப்பு, காதல் தண்டபானி, சுமன் செட்டி, கசன்கானும் இருக்காங்க. பாரதி இசையமைச்சிருக்கார். சிவசங்கர் ஒளிப்பதிவு செய்ய நா.முத்துக்குமார், புகழேந்தி, யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளனர்.

நன்றாக படிக்கக்கூடிய பெண் ஒருவர் தனது படிப்புக்காக செய்யத் துணியும் தவறை மையப்படுத்தி இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். 

4. உ

Actor Thambi Ramaiah sings for Vu Movie Photos

பீனிக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் நந்தகுமார், பி.ராமசாமி, அசோக்குமார் இணைந்து தயாரிச்சிருக்காங்க. இதில் தம்பி ராமையா, வருண், மதன் கோபால், ஸ்மைல் செல்வா, சத்ய சாய், ராஜ்கமல், மதுமிதா மற்றும் பல புதுமுகங்கள் நடிச்சிருக்காங்க. 

அபிஜித் ராமசாமி இசையமைக்க கமல்குமார் எடிட்டிங் செஞ்சிருக்காரு. முருகன் மந்திரம் பாடல்களை எழுதியிருக்காரு. எழுதி, இயக்கியிருக்காரு ஆஷிக்.

புதுமுக இயக்குநர் ஒருவர் எப்படி தனது முதல் தயாரிப்பாளரை பிடித்து முதல் படத்தை இயக்குகிறார் என்பதுதான் கதை.

இதன் விமர்சனம் இங்கே 

இது தவிர, எண்டர்ஸ்கேம் என்ற ஆங்கிலப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. 

Our ScoreLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *