தீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், ‘ஆனந்தம் விளையாடும் வீடு’…!

தீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், ‘ஆனந்தம் விளையாடும் வீடு’…!

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”  படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக திண்டுக்கல் மாநகரில் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கும் இப்படத்தினை ்ரீவாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் தயாரிக்கிறார்.

சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார். ஷிவத்மிகா  ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார்.

சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, ‘மொட்டை’ ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, ‘கும்கி’ ஜோ மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன்,  சௌந்தராஜன், மௌனிகா, மைனா, ‘பருத்தி வீரன்’ புகழ் சுஜாதா, பிரியங்கா, ‘நக்கலைட்ஸ்’ தனம் என ஒரு பெரும் நடச்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்துள்ளது.

தயாரிப்பாளர் P.ரங்கநாதன்  இத்திரைப்படம் பற்றிப் பேசும்போது, “இந்த ஆனந்தம் விளையாடும் வீடு’ படம் உருவாகிவரும்விதம், மனதிற்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது.

இயக்குநர் நந்தா பெரியசாமி கதையை என்னிடம் கூறியதுபோலவே, படத்தையும் மிக அழகாக செதுக்கி வருகிறார். குறிப்பாக சேரன் மற்றும் கௌதம் கார்த்திக் பங்கு பெறும் காட்சிகள் மிக அற்புதமாக உருவாகியுள்ளது.

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திண்டுக்கல் பகுதியில் துவங்கியுள்ளோம். குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைப்படத்தில், பல பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதும்,  படப்பிடிப்பில்  குடும்ப உறவுகளைப் போலவே பழகுவதும் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.

திண்டுக்கல் மக்களும் தங்கள் குடும்பத்தினரை போலவே படக் குழுவை கொண்டாடியது படத்தினை திரையரங்கிலும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்னும்  நம்பிக்கையை கூட்டியுள்ளது. 

பொது முடக்கம் முற்றிலும் நீங்கிய பிறகு,  செண்டிமெண்ட், காமெடி, ஆக்சன் பொழுதுபோக்கு அனைத்தும் சரி விகிதத்தில் கலந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக  ரசிகர்களுக்கு இப்படத்தை தருவோம்…” என்றார்.

Our Score