அமலாபால் கால்ஷீட் டைரி நிரம்பியதாம்..!

அமலாபால் கால்ஷீட் டைரி நிரம்பியதாம்..!

இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடனான திருமண பந்த்த்தில் இருந்து வெளியேறி சமீபத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டு விடுதலைக்குக் காத்திருக்கும் நடிகை அமலாபால், இப்போது முன்பைவிட மும்முரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

அவரது விவகாரத்துக்கு காரணமே இந்தப் படம்தான் என்று பலராலும் கிசுகிசுக்கப்படும் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கவிருக்கும் ‘வட சென்னை’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

amalapaul-6

கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சுதிப் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஹெப்புலி’ படத்தில் கதாநாயகி வேடம்..

தெலுங்கில் இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் முக்கிய வேடம் என தற்போது மிகவும் பிசியாகிவிட்டார் அமலாபால்.

amalapaul-4

மேலும் தற்போது ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் சுசி.கணேசனின் இயக்கத்தில் ‘திருட்டு பயலே’ படத்தில் பாபி சிம்ஹா மற்றும் பிரசன்னா இருவருக்கும் போட்டி போடும் வகையில் மிகுந்த சவாலான வேடத்தில் அமலாபால் நடிக்கப் போகிறாராம்.

இப்படி அடுத்த வருடக் கடைசிவரையிலும் கால்ஷீட் ஃபுல் என்கிற வகையில் அடுத்தடுத்து படங்களை ஒத்துக் கொண்டு, அமலாபால் தீவிர நடிப்பாளினியாக மாறியிருப்பதைக் கண்டு அவரது குடும்பத்தினர் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்..!

இருக்காதா பின்னே..?!

Our Score