full screen background image

‘அலங்கு’ படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது!

‘அலங்கு’ படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது!

DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய ஆக்சன் திரைப்படம் ‘அலங்கு’.

இத்திரைப்படத்தை D.சபரிஷ், S.A.சங்கமித்ரா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இதற்கு முன் இந்நிறுவனம் G.V.பிரகாஷ், கவுதம் மேனன் நடித்த ‘செல்ஃபி’ திரைப்படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத், சரத் அப்பானி, அவர்களுடன் காளி வெங்கட் உடன் குணாநிதியும் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் நாய் ஒன்றும்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது.

மேலும், இந்தப் படத்தில் சௌந்தரராஜா, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய், இதயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து & இயக்கம் : S.P. சக்திவேல், ஒளிப்பதிவு : S.பாண்டிகுமார், இசை : அஜீஷ், கலை இயக்கம் :  P.A. ஆனந்த், படத்தொகுப்பு : சான் லோகேஷ், சண்டை இயக்கம் : தினேஷ் காசி, ஒலி வடிவம் : S.அழகியகூத்தன், சுரேன்.G, ஒலி கலவை : சுரேன்.G, நடனம் : அசார், தாஸ்தா, கூடுதல் கலை இயக்குகம் :  தினேஷ் மோகன், ஒப்பனை : ஷேக் பாஷா, விலங்கு பயிற்சி : செந்து மோகன், ஆடை : T.பாண்டியன், ஆடை வடிவமைப்பு : ஜோஸ்வா  மாக்ஸ்வெல் J, பாடல்கள் : மோகன்ராஜன், கவின், விஷ்ணு எடவன், கிராபிக்ஸ் : அஜக்ஸ் மீடியா டெக், கலரிஸ்ட்  : ரங்கா, வண்ணம் : பிக்சல் லைட் ஸ்டூடியோ, தயாரிப்பு நிர்வாகம் : S.முருகன், தயாரிப்பு மேற்பார்வை : அருண் விச்சு, தயாரிப்பு மேலாளர்  : RK.சேது, உதவி தயாரிப்பு மேலாளர் : சேட்டு போல்ட், பத்திரிக்கை தொடர்பு : R.குமரேசன், விளம்பர வடிவமைப்பு : தண்டோரா, விளம்பர ஸ்டில்ஸ் : R.மனோ, கமலேஷ் சத்தியன், இயக்குனர் குழுவினர் : வீரா விஜயரங்கம், அருண் சிவசுப்ரமணியம், விஜய் சீனிவாசன், லியோ லோகன், அபிலாஷ் செல்வமணி, செபின்.S, தேவதாஸ் ஜானகிராமன், நிர்வாக தயாரிப்பு : D.சங்கர் பாலாஜி, தயாரிப்பாளர் : D.சபரீஷ், S.A. சங்கமித்ரா, தயாரிப்பு நிறுவனம் : DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS.

இந்தப் படத்தை S.P.சக்திவேல் இயக்குகிறார். இவர் ‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியவர். மேலும் சென்ற ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘குட் நைட்’ திரைப்படத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப் பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் முற்றிலும் ஆக்சன் டிராமாவாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி குழுவுக்கும், தமிழக பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும்  இடையே நடக்கும்  சம்பவங்கள்தான் திரைப்படத்தின் மையம், அதன் பின்னணி என்ன என்பதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளனர்.

அலங்கு – என்பது தமிழ் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தை சார்ந்ததாகும். அத்துடன் ராஜராஜ சோழனின் படையில் போர் நாயாக இருந்ததாகவும் வரலாற்று சான்றுகளும், ஆய்வாளர்களும் கூறுகின்றனர். ஆனால் காலப்போக்கில் அந்த இனம் அழிந்து போனதாகவும், மருவி வேறு இன பெயர்களில் வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இக்கதையின் அடிப்படை தன்மைக்கும், நினைவூட்டலுக்கும் இந்த பெயர் மிகவும் பொருந்தி இருப்பதால் இத்திரைப்படத்துக்கு ‘அலங்கு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  

இத்திரைப்படம் முற்றிலும் ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி உள்ளது. தமிழக – கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள்வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்தக் கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்துதான் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் S.P.சக்திவேல்.

இத்திரைப்படத்தை பற்றி இயக்குநர் கூறுகையில், “நாய்களை நேசிப்போர் சமூகம் இன்று மிகப் பெரியது. அப்படி மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக  மாறுகிறது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் விறுவிறுப்பே  திரைக்கதையின் பிரதானம்.

படத்தின் 95% காட்சிகள் அடர் வனப்பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம். அதுவே  படத்தின் மிகப் பெரிய பலமாக இருக்கும்” என்றார்.

முழுக்க முழுக்க வனம், வனம் சார்ந்த மக்கள் என படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு, கேரள மாநிலம் இடுக்கி, அட்டப்பாடி அதை தொடர்ந்து தேனி, கம்பம், கோவை மாவட்டம் ஆனைகட்டி ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக 52 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.

படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து விரைவில் இப்படம் திரைக்கு வரும் எனவும் படக் குழு தெரிவித்துள்ளது.

படத்தின் முதல் பிரதியை பார்த்தவுடனேயே இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமைகளை Sakthi Film Factory நிறுவனம் வாங்கியுள்ளது.

முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை இத்திரைப்படம் தரும் எனவும் படத்தின் அதிக அளவில் விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி படம் இருக்கும் என படக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Our Score