full screen background image

“கையில் கேமிரா போன் இருப்பது புகைப்படக் கலையில் ஒரு புரட்சி..” – ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கருத்து..!

“கையில் கேமிரா போன் இருப்பது புகைப்படக் கலையில் ஒரு புரட்சி..” – ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கருத்து..!

இந்திய சினிமா உலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் பி.சி.ஸ்ரீராம். இவர் 12 மாடல் அழகிகளை வைத்து 12 விதமான பாரம்பரிய திருமண ஆடைகள் அணிந்து உருவாக்கப்பட்ட ‘தி பிரைட் ஷாப் 2021’ என்ற பெயரில் உருவான 2021-ம் வருடத்திய காலண்டரை நேற்று ஒரு விழாவில் வெளியிட்டார்.

அந்த விழாவில் அவர் பேசும்போது, “தற்போது கையில் மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லோரும் கேமராமேன் ஆகிவிட்டார்கள். எல்லோருடைய கையிலும் கேமரா போன் இருப்பது ஆரோக்கியமான விஷயம்.அவர்களுடைய திறமையை அவர்களே வளர்த்துக் கொள்கிறார்கள்.

ஒரு பெரிய இயக்குனர் 30 வருடங்களுக்கு முன்பு, “எப்போது எல்லோருடைய கையில் கேமரா கிடைக்குதோ, அப்போதுதான் கலைக்கான மேடையாக அதை ஏற்றுக் கொள்வேன்…” என்று சொன்னார். அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது. யாருமே எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு புரட்சி நடக்கும் என்று..! புகைப்படக் கலை அடுத்த லெவலுக்கு போகும் என்று நினைக்கிறேன்…” என்றார்.

இவ்விழாவில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குடும்பத்தினர், சபாபதி ராஜரத்தினம்,  யோகேஷ் ்ரீ ரத்னம், ரோஷன் ்ரீ ரத்னம், பிரபல ஓவியர், ஏ.பி.ஸ்ரீதர், ஸ்டில்ஸ் ரவி, ஜவகர் அலி, மாடல் அழகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Our Score