ஒரு இளைஞனின் காதலில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படமே ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’.
ரிஜன் நாயகனாகவும், அர்ஷிதா நாயகியாகவும் நடிக்க, உடன் பட்டிமன்றம் ராஜா, ரேகா சுரேஷ், சுவாமிநாதன், சதுரங்க வேட்டை வளவன், மகாந்தி சங்கர், கலை, நிப்பு இயக்குநர் சரவணசக்தி, மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இசை-ரஜின் மகாதேவ், ஒளிப்பதிவு-ஜே.கே.கல்யாணராம், கலை – ஜேகே, படத்தொகுப்பு – கோபிகிருஷ்ணா, ஸ்டண்ட் – ஓம்பிரகாஷ், பாடல்கள் – கவிஞர் சிநேகன், லலிதானந்த், பா.முகிலன், மதுரகவி., கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் நாகராஜன். இவர் இயக்குநர் சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
சென்னையில் வியாசர்பாடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை, மற்றும் எண்ணூர் போன்ற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.