full screen background image

போனி கபூர் தயாரிப்பில் ஹிந்தி ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் அஜீத்..!

போனி கபூர் தயாரிப்பில் ஹிந்தி ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் அஜீத்..!

நடிகர் அஜீத்குமார் தனது 59-வது படத்தை அறிவித்திருக்கிறார். இந்த முறை பாலிவுட்டில் விமர்சன ரீதியாக பாராட்டுக்களையும்  மற்றும் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் செய்த ‘பிங்க்’ இந்தி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கில் அஜீத் நடிக்கவிருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான Bayview Projects LLP நிறுவனத்தின் மூலம் தயாரித்து தமிழ்ச் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர்.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் படத்தின் மூலம் பாராட்டுக்களை குவித்த ஹெச்.வினோத் இந்தப் படத்தை இயக்குகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பத்திரிகையாளர் பாண்டே நடிக்கவுள்ளார்.

மற்ற  நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இறுதி செய்யப்பட்ட பின் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். இந்த படம் இன்று அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. 

இது பற்றி பேசிய தயாரிப்பாளர் போனி கபூர், “தென்னிந்திய சினிமா துறையில், குறிப்பாக தமிழ் சினிமாவில் சினிமா தயாரிப்பை மேற்கொள்வதை நான் பெருமையாக கருதுகிறேன்.

‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அஜித்குமார் உடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு திரைப்படம் நடிக்க வேண்டும் என என் மனைவி ஸ்ரீதேவி பெரிதும் விரும்பினார். கடந்த ஆண்டுவரை நல்ல கதை எதுவும் கிடைக்கவில்லை.

ஒரு நாள் அஜித்தே ‘பிங்க்’ படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தை தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என ஸ்ரீதேவியும் அப்போதே உடனடியாக அந்த எண்ணத்தை ஏற்றுக் கொண்டார். 

அதன் தொடர்ச்சியாக இன்று படப்பிடிப்பை துவக்கி, 2019-ம் ஆண்டு மே 1-ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இன்னொரு படத்தையும் தயாரிக்கிறோம். அது 2019 ஜூலையில் துவங்கி, 2020 ஏப்ரல் 10-ம் தேதி வெளியிடப்படும். இரண்டு படங்களும் ஜீ நிறுவனத்தின் ஆதரவுடன் தயாராகின்றன. அஜீத்துடன் பணி புரியும் மிகச் சிறந்த  அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

இயக்குனர் வினோத்தின் படைப்புகளை நான் பார்த்திருக்கிறேன். மிகச் சிறந்த திரைப்படங்களை கொடுத்து வருகிறார். குறிப்பாக, அவரது முந்தைய படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை மிகவும் யதார்த்தமாக எடுத்திருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. தனித்துவமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து, அவற்றை தனது சிறந்த கதை சொல்லல் மூலம் சிறப்பாக செய்யும் அவர்தான் தமிழ் மொழியில் ‘பிங்க்’ படத்தை இயக்க சரியான நபராக இருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்…” என்றார்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் படத்தில் முக்கிய தொழில் நுட்பக் கலைஞர்கள், பத்திரிகையாளர் பாண்டே, மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ajith-pink-movie-poojai-stills-6 ajith-pink-movie-poojai-stills-5 ajith-pink-movie-poojai-stills-4 ajith-pink-movie-poojai-stills-3 ajith-pink-movie-poojai-stills-2 ajith-pink-movie-poojai-stills-1

Our Score