2021 பொங்கல் தினத்தில் விஜய்-அஜீத் மோதல்..!

2021 பொங்கல் தினத்தில் விஜய்-அஜீத் மோதல்..!

தல அஜீத் நடித்திருக்கும் ‘வலிமை’ படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

அஜீத்-ஹூமா குரேஷி நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘வலிமை’.

இப்போதுவரையிலான அஜீத்தின் திரைப்படங்களில் அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு வரும் படமும் இதுவேயாகும்.

தற்போது இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்றைக்குத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே அதே பொங்கல் தினத்தன்றுதான் விஜய்யின் ‘பீஸ்ட்’ படமும் வெளியாகவுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் இந்த பொங்கல் ரிலீஸீல் அஜீத்தின் ‘வலிமை’யும் சேர்ந்திருப்பது திரையரங்கு உரிமையாளர்களும், திரைப்பட விநியோகஸ்தர்களையும் ஒரு சேர அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஏனெனில் தமிழ்ச் சினிமாவின் இன்றைய நிலைமைக்கு உச்ச நட்சத்திரங்கள் அஜீத்தும், விஜய்யும்தான். அவர்கள் இருவரின் படங்கள் தனியே வந்தாலே வசூல் 100 கோடிகளைத் தொட்டுவிடும். ஆனால் அதே நேரம் ஒரே நாளில் வெளியானால் இரண்டு படங்களும் 100 கோடியைத் தாண்டுவது சாத்தியமல்ல. ஏனெனில் தனிப்பட்ட குடும்பத்தினர் ஏதாவது ஒரு படம் பார்த்தால் போதும் என்று முடிவெடுத்து அடுத்த படத்திற்கு வராமல் போனால், அதனால் இரண்டு படத் தயாரிப்பாளர்களும்தான் நஷ்டமடைவார்கள். படத்தினை வாங்கி வெளியிட போகும் திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் சேர்ந்தே நஷ்டமடைவார்கள்.

அதனால் இந்த இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படத்தை பொங்கலுக்குக் கொணர்ந்துவிட்டு அடுத்த படத்தை ஜனவரி 26-க்கு கொண்டு வரலாம் என்று திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் தங்களது வாட்ஸ் அப் குழுக்களில் பேசி வருகிறார்கள்.

Our Score