full screen background image

புதிய படத்தில் அஜீத்தின் புதிய லுக்கு..!

புதிய படத்தில் அஜீத்தின் புதிய லுக்கு..!

தல அஜீத்தின் இன்னமும் பெயர் வைக்கப்படாத 55-வது படத்தின் ஷீட்டிங் நேற்றைக்கு சென்னையில் துவங்கிவிட்டது.

தலயின் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிய வேண்டிய ஒரே விஷயம்… தல இந்தப் படத்துல எந்த மாதிரியான தோற்றத்துல வருவாருன்றதுதான்..

அதுக்காக தயாரிப்பாளர் தரப்பில் இன்றைக்கு இரண்டே இரண்டு ஸ்டில்களை மட்டும் ரிலீஸ் செஞ்சிருக்காங்க.. நீங்களே பார்த்துக்குங்க..!

6C3B0543
6C3B0554

லட்சக்ணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் தலையின் புதிய கெட்டப்புக்கு ரெண்டு ரெண்டு போட்டோவை அனுப்பி வைத்திருக்கும் இந்தத் தயாரிப்பாளரை என்னன்னு சொல்றது..?

இந்தப் படத்தில் முதன்முறையாக அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கிறார் தங்கத் தாரகை அனுஷ்கா. இன்னொரு ஹீரோயின் இருக்காங்கன்னு சொல்றாங்க.. ஆனா அதையும் உண்மையா சொல்ல மாட்டேன்றாங்க. ஏதோ சஸ்பென்ஸாம்..!

படத்தின் கேமிராமேன் Dan Macarthur என்ற ஆஸ்திரேலிய ஒளிப்பதிவாளர்.

உடைகள் – உத்ரா

கலை இயக்குநர் – ராஜீவன்

ஸ்டில் போட்டோகிராபர் – சிட்டு

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா

எழுத்து – ஸ்ரீதர் ராகவன்

இயக்கம் – கெளதம் வாசுதேவன் மேனன்

தயாரிப்பு – ஏ.எம்.ரத்னம்

Our Score