அஜீத்-கெளதம் மேனன் இணையும் படத்தின் டைட்டில் “துடிக்குது புஜம்”

அஜீத்-கெளதம் மேனன் இணையும் படத்தின் டைட்டில் “துடிக்குது புஜம்”

தல அஜீத் நடிக்கும் 55-வது படமான கெளதம் மேனனின் படத்திற்கு டைட்டில் இன்னமும் வைக்கவில்லை என்றார்கள். யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்கள். விரைவில் வரும் என்றார்கள்.

ஆனால்  கடந்த 11-ம் தேதி ஷூட்டிங் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. டைட்டில் பிரச்சினையில் வில்லங்கமே வரக் கூடாது என்பதால் பலவிதமான ஹீரோயிஸ டைட்டில்களை யோசித்து தயாரித்த கெளதம் அண்ட் டீம்.. இதில் இருந்து சில டைட்டில்களை தலையிடம் காட்டியிருக்கிறது.

அவருடைய ஆலோசனையின்படி ‘துடிக்குது புஜம்’ என்ற டைட்டில் அனைவராலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக இன்றைய ரகசியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை இந்த டைட்டில் மாறினாலும் அதற்கு இந்தக் கொம்பனி பொறுப்பில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

சினிமா என்பதே மாறுதலுக்கானது..!

துடிக்குது புஜம்..! ஜெயிப்பது நிஜம்..!

Our Score