அஜீத் படத்தின் தலைப்பு ‘என்னை அறிந்தால்’..!

அஜீத் படத்தின் தலைப்பு ‘என்னை அறிந்தால்’..!

ஒரு வழியா ‘தல’ அஜீத் படத்தின் டைட்டிலை அறிவித்திருக்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன்..!

ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘தல’ அஜீத்தின் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் தலைப்பு ‘என்னை அறிந்தால்’ என்பதாம்.. !

இயக்குநர் கெளதம் இயக்கும் படத்தின் டைட்டில்களெல்லாம் தமிழாகத்தான் இருக்கும். இதுவும் அதுபோலத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்தனர் ரசிகர்கள். ஆனால் இந்த அளவுக்கு இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை..

yennai_arindhaal

ஒரு டைட்டில் படத்தின் கதையையே சொல்லிவிட வேண்டும் என்பார்கள்.  இதுவும் அப்படித்தான் இருக்குமென்று நம்புவோமாக..!

மீடியாக்களுக்கு சற்று நிம்மதி.. அனைத்து இடங்களிலும் தல-55 என்றே எழுதி, எழுதி கடுப்பில் இருக்கிறார்கள் அனைவரும். நன்றி இயக்குநர் ஸார்..!

Our Score