full screen background image

“வேதாளம்’ டிக்கெட் 500 ரூபாய் – முதல்வர் தலையிட அஜீத் ரசிகர்கள் கோரிக்கை..!

“வேதாளம்’ டிக்கெட் 500 ரூபாய் – முதல்வர் தலையிட அஜீத் ரசிகர்கள் கோரிக்கை..!

இது ‘வேதாளம்’ படத்தின் நல்லதுக்கா அல்லது கெட்டதுக்கா என்று தெரியவில்லை.

ஆனால் மதுரையில் அஜீத் ரசிகர்கள் ஒட்டியுள்ள திடீர் போஸ்டரால் சினிமாவுலகத்தினருக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பண்டிகை நாட்களில் பெரிய படங்களை திரையிடும்போது டிக்கெட் விலையை அநியாயத்திற்கு ஏற்றி வைத்து கொள்ளை லாபம் பார்ப்பது திரையரங்க உரிமையாளர்களின் வாடிக்கை.

இதுவரையிலும் வரிச் சலுகையிலும் கொள்ளையடித்தார்கள். அதற்குத்தான் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு குட்டு குட்டி வரிவிலக்கு பெற்றால் டிக்கெட் விலையைக் குறைத்தாக வேண்டும் என்று உத்தரவிட்டுவிட்டது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தியேட்டர் அதிபர்கள் செய்த மேல் முறையீட்டு மனுவையும் விசாரிக்க மறுத்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். 

இந்த நேரத்திலும் இப்போதும் மதுரையில் தியேட்டரின் பெயரை மட்டுமே குறிப்பிட்டு கட்டணம் குறிப்பிடாத ஒரு துண்டு சீட்டினை கொடுத்து ‘இதுதான் டிக்கெட்.. இதன் விலை 500 ரூபாய்’ என்று அஜீத்தின் ரசிகர்களிடம் விற்று வருகிறார்கள் தியேட்டர்காரர்கள்.

அஜீத்தின் ரசிகர்கள் வேதாளம் படத்தினை முதல் நாளே படத்தை பார்த்துவிட வேண்டும் எ்ன்று துடியாய் துடிக்கிறார்கள். அவர்களிடத்தில் எப்பாடுபட்டாவது காசை கறந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள்.

இந்தப் பகல் கொள்ளையைக் கண்டித்து அஜீத் ரசிகர்களே மதுரை மாநகரெங்கும் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள். 

vedalam109

அதில் “மாண்புமிகு அம்மா அவர்களுக்கு வேண்டுகோள்.. ‘தல’ அஜித்தின் 56-வது படமான ‘வேதாளம்’ படத்திற்கு உங்களது ஆட்சியில் ஒரு டிக்கெட் ரூ.500-க்கு விற்கப்படுகிறது. 

சொல்லி அடிக்கும் வல்லமை வாய்ந்த எங்கள் முதல்வர் அம்மா அவர்களே.. தாங்கள், ஒரு டிக்கெட் விலை 90 ரூபாய்க்கு ‘தல’ அஜீத் ரசிகர்களாகிய எங்களுக்குக் கிடைக்க ஆட்சியருக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட வேண்டுகிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தியேட்டர் அதிபர்கள் இதுக்கெ்லலாமா பயப்படப் போகிறார்கள்..? கொடுக்க வேண்டிய கட்டிங்கை இன்னும் கொஞ்சம்கூட கொடுத்திட்டா அரசுத் தரப்பினர் நவதுவாரங்களையும் பொத்திக்கிட்டுப் போயிரப் போறாங்க..!

Our Score