ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட் பட நிறுவனம் தயாரித்து, புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடவிருக்கும் படம் ‘இஞ்சி முறப்பா’.
இந்த படத்தில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சோனி சிறிஷ்டா நடிக்கிறார். மற்றும் புதுமுகம் கிருஷ்ணா, ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர், சிட்டிபாபு, சாய்முருகன், ராதாகிருஷ்ணா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – P.R.K. ராஜு
பாடல்கள் – யுகபாரதி
இசை – மணிசர்மா
எடிட்டிங் – ஹரி
கலை – ஹரி.K
நடனம் – சொர்ணா
ஸ்டண்ட் – நந்து
தயாரிப்பு நிர்வாகம் – வாசு
நிர்வாக தயாரிப்பு – ராஜு
தயாரிப்பு – மலர்கொடி முருகன், A.P.ராதாகிருஷ்ணன்.
கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – S. சகா (இவர் திரைப்பட கல்லூரியில் பயின்றதுடன் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.)
படம் பற்றி இயக்குநர் பேசும்போது, “தன் தங்கையை எப்படியெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்று ஒரு அண்ணன் கண்ட கனவு பொய்யாகிப் போகிறது..! தன் தங்கை காதலனிடம் ஏமாந்து போய் நிற்கும்போது அண்ணன் எடுக்கிற முடிவுதான் கதை..! பாசத்தையும், நாயகனின் காதலையும் திரைக்கதையில் சுவையாக சொல்லி இருக்கிறோம். இதன் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் நடைபெற்றுள்ளது…” என்றார் இயக்குனர்.









