full screen background image

“நீங்க மட்டும் திருடலையா..?” – நடிகர் ராதாரவியின் காட்டமான கேள்வி..!

“நீங்க மட்டும் திருடலையா..?” – நடிகர் ராதாரவியின் காட்டமான கேள்வி..!

சரத்குமாரும், ராதாரவியும் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தபோது சங்கப் பணத்தில் கையாடல் செய்துவிட்டதாக தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நடிகர் ராதாரவி.. “நீங்க மட்டும் திருடலையா…?” என்று எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்.

ஒரு வீடியோ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ராதாரவி இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

அப்போதைய நடிகர் சங்கத்திற்கும், இப்போதைய நடிகர் சங்கத்திற்கும் உள்ள வித்தியாசம் பற்றிய கேள்விக்கு ராதாரவி பதிலளிக்கையில், “அப்போ இருந்த காங்கிரஸ்ல வ.உ.சிதம்பரனார் இருந்தார். இப்போ இருக்குற காங்கிரஸ்ல ப.சிதம்பரம் இருக்கார். அது மாதிரிதான் அப்போ இருந்த நடிகர் சங்கமும்.. இப்போ இருக்குற நடிகர் சங்கமும்.

நான் நடிகர் சங்கத்துல பொறுப்புக்கு வந்தப்போ அந்த இடமே சுடுகாடு மாதிரியிருந்துச்சு. நான் வந்த பின்னாடிதான் டான்ஸ் கிளாஸ், ஜிம், வாலிபால், ஷட்டில் காக் இதையெல்லாம் கொண்டு வந்தேன். எப்பவும் கூட்டம், கூட்டமா.. கலகலப்பா இருந்தது அந்த இடம்.

ஒரு தாயா.. புள்ளையா எல்லார்கிட்டேயும் பழகினோம். இப்போ எல்லாம் போச்சு. சினிமாவை வைச்சு எதையும் கணக்குப் போடக் கூடாது. இவங்க எதையும் பார்மெட்ல செய்யலை. இப்பவே அதற்கான அறிகுறிகள் தெரியுது.

இப்போ ஐசரி கணேஷ் வந்திருக்காரு. நிச்சயமாக நடிகர் சங்கத்தைக் கைப்பற்றுவாருன்னு நினைக்கிறேன். அவர் வர வேண்டியவருதான். வரணும். நல்ல மனுஷன். கொடை வள்ளல். எல்லாருக்கும் நல்லது செய்யுற குணமுடையவர். அவங்கப்பாவும் நாடக நடிகர். அவரும் நாடக நடிகர். அதுனால அந்த நல்ல குணம் அவர்கிட்ட இருக்கு.

நம்ம வாழ்க்கையே ஒரு தற்காலிகமானதுதான். இதுல நடிகன்ற போஸ்ட்டு அதைவிட தற்காலிகமானது. நடிகர் சங்கத் தலைவர்ன்ற பதவி அதைவிட தற்காலிகமானது. அதை அவங்க புரிஞ்சுக்கணும்.

நடிகர் சங்கத்துல நான் 9 வருஷம் தலைவராக இருந்திக்கிறேன். 6 வருஷம் கமிட்டி மெம்பரா இருந்திருக்கேன். 6 வருஷம் செயலாளரா இருந்திருக்கேன். பெப்சியின் செயலாளார 7 வருஷம் இருந்திருக்கேன். இப்போ டப்பிங் யூனியன்ல் 35 வருஷமா பொறுப்புல இருக்கேன். நான் இப்போ வேணாம்ன்னு சொல்லிட்டுப் போனாலும் விட மாட்டாங்க. எல்லாருக்கும் தேவையானதை செஞ்சதாலதான் என்னை வைச்சிருந்தாங்க.

அதுல திருடு போயிருச்சு.. இங்க திருடு போயிருச்சுன்னு சொல்றவங்க சொல்லுவாங்க. நாம செவி சாய்க்கக் கூடாது. நான் சைலண்டா இருக்கேன். ஆனால், அவங்க சைலண்ட்டா இருக்க மாட்டேன்றாங்க.

ஆ.. ஊ..ன்னா சரத்குமாரை பத்தி பேசுறாங்க. அவரைப் பத்திப் பேசக் கூடாது. அவர் நடிகராக, ஹீரோவாக நடித்தவர். கோடில சம்பளம் வாங்கினவர். ச்சும்மா எதுக்கெடுத்தாலும் ‘சரத்குமார் திருடிட்டாரு’.. ‘சரத்குமார் திருடிட்டாரு’ன்னு சொன்னால் எப்படி.. அப்போ நீ திருடலையா..? ‘ஐயோ நாங்க அப்படி பண்ணலை.. நாங்க நடிச்சுக்கிட்டிருக்கோம்ன’்னு சொல்றாங்க. அப்போ நாங்க மட்டும் என்ன செரைச்சுக்கிட்டா இருக்கோம்..? அப்படீன்னு பதில் சொல்லியிருக்கேன்.

இப்பவும் சொல்றேன்.. கடைசியா நடந்த நடிகர் சங்க தேர்தல் மீட்டிங்ல நான் ஒண்ணு சொல்லிட்டு வந்தேன். ‘எங்களைத் தேர்ந்தெடுத்தீங்கன்னா அதுனால எங்களுக்கு நஷ்டம்தான். ஆனால், எங்களைத் தேர்ந்தெடுக்கலைன்னா எங்களுக்கு லாபந்தான்’னு சொன்னேன்.

நிறைய பேர் கடைசி நேரத்துல பணம் வாங்கிட்டுத்தான் ஓட்டு போட்டாங்க. ரித்திஷ் தம்பிதான் பணம் கொடுத்தார். அவங்க ஜெயிச்சாங்க. இப்போ மூணே வருஷத்துல ஆட்டம் காட்டிருச்சு. கம்பியெல்லாம் வெளில தெரியுது. கட்டிடம் கட்டினால்தான் எனக்குன்னு வேகமா பேசுனாங்க.. அதெல்லாம் வெட்டி, வீறாப்பு..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ராதாரவி.

Our Score