‘அடங்காமை’ திருக்குறளை கருவாக வைத்து உருவாகியிருக்கும் ‘அடங்காமை’ திரைப்படம்

‘அடங்காமை’ திருக்குறளை கருவாக வைத்து உருவாகியிருக்கும் ‘அடங்காமை’ திரைப்படம்

Vores Picture நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் அடங்காமை’

‘அடக்கம் அமரருள் உய்க்கும்., அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்’ என்ற குறளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது இத்திரைப்படம்.

எழுத்து இயக்கம் - R.கோபால், ஒளிப்பதிவு – வெற்றி, இசை - கியூரன் (டென்மார்க்). தயாரிப்பு - புலேந்திரராசா பொன்னுதுரை (டென்மார்க்), மைக்கேல் ஜான்சன்.

மூன்று சிறு வயது நண்பர்கள், பெரியவர்கள் ஆனாலும் அவர்களுக்குள் நட்பு தொடர்கிறது. ஒருவர் அரசியல்வாதி, ஒருவர் நடிகர், ஒருவர் டாக்டர். டாக்டரின் காதலியின் அக்கா, வளர்ப்பு தகப்பனார், இருவரும் கொலை செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில் டாக்டர் கொலையாளிகளை கண்டு பிடிக்க தனது நண்பர்களை உதவிக்கு நாடுகிறார். நண்பனுக்கு நண்பர்கள் உதவி செய்கிறார்களா என்று பார்த்தால் இறுதியில் கொலையாளிகளே நண்பர்கள்தான் என்பதை டாக்டர் அறிகிறார்.

ஒரு நண்பன் எப்படி இன்னொரு நண்பனை பழி வாங்க முடியும்..? அது உண்மையான நட்புக்கு அழகில்லையே. ஆனால் இயற்கை தீயோரை வாழ விடாது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.