‘அரண்மனை’ படத்தின் மெகா ஹிட்டுக்கு பின்பு அடுத்த பாகம் எடுக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறேன் என்று சொன்ன சுந்தர்.சி இன்று முடிவே செய்துவிட்டாராம்.
இந்த ‘அரண்மனை’ முதல் பாகத்தில் தொடர்ச்சியா அல்லது டைட்டிலை மட்டும் வைத்துக் கொண்டு வரும் வேறொரு கதையா என்று தெரியவில்லை. ஆனால் சந்தேகம் வலுக்கிறது.
காரணம், படத்தில் நடிக்கப் போவதாக இருக்கும் நடிகர், நடிகைகளின் பட்டியல். சித்தார்த், திரிஷா, காஜல் அகர்வால், அஞ்சலி, சூரி என்று அணி வகுக்கிறது பட்டாளம்.
1 மணி நேரத்திற்கு முன்புதான் திரிஷா தனது டிவிட்டர் அக்கவுண்ட்டில் ‘அரண்மனை பாகம்-2’-ல் தான் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
ஆனால் இதில் சந்தானம் இல்லை என்று இப்போதுவரையிலும் சொல்லி வருகிறார்கள். இதுதான் ஏன் என்று தெரியவில்லை. பட்ஜெட்டா அல்லது வடிவேலு டைப்பில் இதுவும் ரகளையாகிவிட்டதா என்பது படத்தின் ஷூட்டிங் துவக்கத்தில் தெரிந்துவிடும். காத்திருப்போம்..!
சீக்கிரமா கொண்டாந்திருங்க.. பேய் சீஸன் ஓடிப் போயிரப் போகுது..!