full screen background image

“இந்த வருஷம் எப்படியும் விஜய்கூட நடிச்சிருவேன்..” – நடிகை சோனம் பாஜ்வாவின் அபார நம்பிக்கை..!

“இந்த வருஷம் எப்படியும் விஜய்கூட நடிச்சிருவேன்..” – நடிகை சோனம் பாஜ்வாவின் அபார நம்பிக்கை..!

சோனம் பாஜ்வா.  சமீபத்திய தமிழ் திரை உலகின் புதிய வரவுகளில் கொஞ்சம் நம்பிக்கை தருபவர்.

Sonam Bajwa (1)

தனது முதல் படமான ‘கப்பல்’ பெரும் வெற்றி அடைந்ததை ஒட்டி மிக மிக உற்சாகத்தில் இருக்கிறார். சோனம் பாஜ்வா பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். கோதுமை நிற முகமும், அவரது வலிமையான உடற்கட்டும் அவருக்கும் பஞ்சாப் மண்ணுக்கும் உள்ள பூர்வீகத் தொடர்பை பறைசாற்றும்.

“நான் பஞ்சாபை சேர்ந்தவள்தான் என்றாலும்  என்னுடைய நண்பர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்தான். இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஷங்கர் ஸாருடைய தயாரிப்பில் என்னுடைய  முதல் படம் வந்திருப்பது எனக்கு மிக, மிக பெருமையுடைய விஷயம்.

‘கப்பல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ்த் திரையுலகின் தூண்களான விஜய்  சார், விக்ரம் சார், ரகுமான் சார், ஷங்கர் சார் அனைவரையும் ஒரே மேடையில் சந்தித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவர்களது கனிவான வார்த்தைகளும், ஊக்கமும் என்னை உற்சாகமூட்டியது.

இதற்கு பிறகு நான் விஜய் சாருக்கு தீவிர ரசிகை ஆகி விட்டேன். எளிமையாக அதே நேரம் எல்லோரையும் கவரும் காந்தமுமாக இருந்தார். அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. அவருடன் ஜோடியாக ஒரு படம்  நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறேன். அது இந்த வருடமே கை கூடும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

‘கப்பல்’ படத்துக்கு பிறகு எனக்கு நிறைய  வாய்ப்புகள் வந்திருக்கின்றன. அது சம்பந்தமாக விரைவில் முறையான அறிவிப்பு வரும். நான் சமீபமாக மேலும் நிறைய தமிழ் படங்களை பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். திரையுலகின் நுணுக்கங்களை அந்த படங்கள் மூலம் கற்றுக் கொண்டு வருகிறேன்…” என்கிறார் சோனம் பாஜ்வா.  

Our Score