full screen background image

பிறந்த நாளில் கண் கலங்கிய நடிகை சினேகா..!

பிறந்த நாளில் கண் கலங்கிய நடிகை சினேகா..!

புன்னகை இளவரசி சினேகா தனது பிறந்த நாளை நேற்று திறன்குன்றியோர் இல்லத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.  

DSC_2971_800x533

தனது ஒவ்வொரு பிறந்த நாளையும் ஆடம்பரமாக கொண்டாடாமல் அனாதை குழந்தைகள் இல்லத்திலும், அல்லது திறன்குன்றியோர் இல்லத்திலோ அவர்களுக்கு உணவு வழங்கியும் கொண்டாடி வருகிறார் நடிகை சினேகா.

DSC_2958_800x533

சமீபத்தில் விஹான் என்ற ஆண் குழந்தைக்குத் தாயான பின்பு வெளியே எங்கும் தலை காட்டாமல் இருந்து வந்தார் சினேகா. நேற்று அக்டோபர் பன்னிரெண்டாம் தேதி அவருடைய பிறந்த நாளானதால் கொளத்தூரில் உள்ள ஸ்ரீ அருணோதயம் சாரிட்டபிள் ட்ரஸ்ட்டில் உள்ள மன  நலம் குன்றிய குழந்தைகள் நடுவே தனது கணவர் பிரசன்னாவுடன் வந்து கொண்டாடினார். அவர்களுக்கு கேக் ஊட்டியும் உணவு பரிமாறியும் மகிழ்ந்தார்.

DSC_2946_800x533 

நிறைவாக ட்யூப் மூலமாக உணவு பெற்றுக் கொள்ளும் நிலையில் உள்ள குழந்தைகள் நிரம்பிய அறைக்கு சென்ற சினேகா அவர்களின் நிலையைப் பார்த்ததும் தாங்க முடியாமல் கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார். மகிழ்வாக கொண்டாட வந்தவர் அழத் தொடங்கியதும் அங்கு பணிபுரிந்த  ஊழியர்களும் கலங்கிவிட்டனர்.

Our Score