1990-களில் துவங்கி பல முன்னணி கதாநாயகர்களின் காதல் நாயகியாக வலம் வந்தவர் சிம்ரன். தனது நடிப்பு, ஆடல் ஆகியவற்றின் மூலம் உச்சத்திலிருக்கும்போதே திருமணம் செய்துகொண்டு சினிமாவிற்கு குட்பை கூறினார்.
தனது அழகிற்கு ஏற்றார்போல் அதீத திறமையுடையவர் என கூறப்பட்டவர், இத்தனையாண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ஒரு ‘ஹாய்’ சொல்லியுள்ளார். ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் சிம்ரன்.
இத்திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாகவும் கயல் ஆனந்தி ஹீரோயினாகவும் நடிக்கவுள்ளார்கள். மேலும் மயில்சாமி, எஸ்.ஜே.சூர்யா, விடிவி கணேஷும் நடிக்கவுள்ளார்கள்.
ஒளிப்பதிவு – ரிச்சர்டு எம்.நாதன். படத்தொகுப்பு – ரூபன். கலை இயக்கம் – உமேஷ்குமார். காஸ்ட்யூம் டிஸைனர் – நிரஞ்சனி அகத்தியன், நடனம் – எம்.ஷெரீப், பாடல்கள் – நா.முத்துக்குமார், கபிலன், சண்டை பயிற்சி – ஹரி தினேஷ். எழுத்து-இயக்கம் – ஆதிக் ரவிச்சந்திரன்.
இது பற்றி கூறிய சிம்ரன், “படத்தின் இயக்குநர் ஆதிக் எனனிடம் கதையைச் சொன்னார். என்னுடைய கேரக்டர் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர். அதுவும் புதிதாய் இருந்தது., அதனால் நடிக்க ஒத்துக் கொண்டேன். எனது கேரக்டர் பற்றி நானே அதிகமாக சொல்லக்கூடாது. ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ மூலம் என்னை மீண்டும் வெள்ளித்திரையில் காண பெரும் ஆவலாய் உள்ளது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது…” என்றார்.