full screen background image

“தனுஷ் என்னோட வெல்விஷர் இல்ல; அதுக்கும் மேல..!” – நடிகர் சிவகார்த்திகேயனின் பதில்..!

“தனுஷ் என்னோட வெல்விஷர் இல்ல; அதுக்கும் மேல..!” – நடிகர் சிவகார்த்திகேயனின் பதில்..!

ஊரெல்லாம் ‘காக்கிசட்டை’ பீவரைவிடவும் ‘தனுஷ்-சிவகார்த்திகேயன் லடாய்’ என்ற பீவரை வைரலாக்கி பரவிக் கொண்டிருக்கிறது மீடியா.

‘காக்கிசட்டை’ பிரஸ்மீட்டில் யாரும் கேட்காமல் வாலண்டியராகவே தனுஷுக்கும், தனக்கும் எந்தப் பிரச்சினையுமில்லை என்று சொல்லியும் அன்றைய இரவில் விஜய் டிவி நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வுகள் மீடியாக்களின் சந்தேகத்திற்கு மேலும் உரமூட்ட.. அந்த சர்ச்சைகள் இன்னமும் தொடர்கின்றன.

சமீபத்தில் ‘ஆனந்தவிகடனு’க்கு அளித்துள்ள பேட்டியிலும் இதையேதான் சொல்லியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

“தனுஷுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையுமில்லை. இப்போகூட அவர், நான், அனிருத் மூணு பேரும் பசங்களோட சேர்ந்து கிரிக்கெட் விளையாடிட்டு வந்தோம். முன்னாடி எல்லாரும் கொஞ்சம் ஃப்ரீயா இருந்தோம்… சேர்ந்து சுத்தினோம். அதனால ஒண்ணாவே இருக்கிற மாதிரி இருந்துச்சு.

இப்போ அவர் இந்தி சினிமாவரைக்கும் பரபரப்பாகிட்டார். நான் அவுட்டோர் படப்பிடிப்புகள்ல மாட்டிக்கிட்டேன். அதனால முன்னாடி மாதிரி அடிக்கடி சந்திச்சுக்க முடியலை.  அவ்ளோதான்..

‘சிவகார்த்திகேயன் வளர்ச்சியைத் தடுக்க தனுஷ், விஜய் சேதுபதி – நயன்தாராவை வெச்சு ‘நானும் ரௌடிதான்’ படத்தைத் தயாரிக்கிறார்’னு செய்தி வந்தப்ப சிரிப்புதான் வந்துச்சு. தனுஷ் சாரோட ‘வொண்டர்பார்’ தயாரிப்பு நிறுவனம் வெவ்வேறு ஆட்களை வெச்சு நிறையப் படங்கள் தயாரிக்கும். அது சினிமா பிசினஸ்.

அதுக்கு நடுவுல, ‘நீங்க என் படத்தை மட்டும்தான் தயாரிக்கணும்’னு நான் போய் அவர்கிட்ட சண்டை போட முடியுமா? இன்னொண்ணு… தனுஷ் சார் பல வருஷங்களா சினிமாவுல இருக்கார். ஒரு படத்தைத் தயாரிக்கிறது மூலமா ஒரு ஹீரோவை அழிக்க முடியாதுனு அவருக்கு நல்லாவே தெரியும். அதைவிட முக்கியமா… அவர் அப்படி யோசிக்கிற ஆள் இல்லை. அவர் ரொம்ப நல்ல மனுஷன்.

மத்தபடி, நான் எவ்வளவு உயரம் போனாலும் அதைவிட அதிக உயரத்தில் தனுஷ் சாரை என் மனசுல வெச்சிருப்பேன். அவரை சும்மா ‘என் நண்பர்’ன்னு சொல்லி சுருக்கிட முடியாது. ‘வெல்விஷர்’ன்னுகூட சொல்ல முடியாது.  அவர் அதுக்கும் மேல..!” என்கிறார் சிவகார்த்திகேயன்.

Our Score