வலைத்தள தொலைக்காட்சிகளும், யூ டியூப் சேனல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் தனிப்பட்ட வீடியோ ஆல்பங்களும் தற்போதைய இளைய சமுதாயத்தினரை பெரிதும் கவர்ந்து வருகிறது.
சமீபத்தில் வெளியான எஞ்சாமி வீடியோ பாடல் இந்தியா முழுவதும் புகழ் பெற்று இன்றைக்கும் டிரெண்ட்டிங்கில் இருந்து வருகிறது. தற்போது இதேபோல் வீடியோ ஆல்பங்களை வெளியிடுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த வரிசையில் தமிழ் சினிமாவில் தரமான, வெற்றி படைப்புகளை தொடந்து தந்து வரும் Axess Film Factory நிறுவனம், Suren Studiomyth நிறுவனத்துடன் இணைந்து தற்போது ஒரு அழகான ரொமான்டிக் சிங்கிள் ஆல்பத்தை தயாரித்துள்ளது.

‘போதையில் தள்ளாதே’ என்னும் இப்பாடலில் இளைஞர்களின் விருப்பமிகு இளம் திறமைகளான, பூர்னேஷ், ஷிவானி நாராயணன் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்.
சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த ‘பேச்சிலர்’ டீஸரை உருவாக்கிய ‘பேச்சிலர்’ படக் குழுதான் இப்பாடலையும் ஒன்றிணைந்து, பணியாற்றி உருவாக்கியுள்ளனர்.

இப்பாடலின் கருவை ‘பேச்சிலர்’ பட இயக்குநர் சதீஷ் செல்வகுமார் உருவாக்கியிருக்கிறார். இசையமைப்பாளார் அருண் ராஜ் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, M.லக்ஷ்மிதேவா கலை இயக்கம் செய்துள்ளார். தமிழனங்கு பாடல் வரிகளை எழுத, அசார் இப்பாடலுக்கு நடன அமைப்பு செய்துள்ளார்.
மிக விரைவில் இந்த சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளது.









