ஒரு தியேட்டருக்குள்ளேயே நடக்கும் கதையில் உருவாகியிருக்கும் ‘MMO7’ திரைப்படம்

ஒரு தியேட்டருக்குள்ளேயே நடக்கும் கதையில் உருவாகியிருக்கும் ‘MMO7’ திரைப்படம்

தயாரிப்பாளர்கள் ஆர்.ஆர்.ஆர் மற்றும் ஜெகதீசன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘MMO7’.

இப்படத்தில் நாயகனாக ஜே.டி.சக்கரவர்த்தி நடித்திருக்கிறார். இவர் ‘சமர்’, ‘அரிமா நம்பி’, ஜீரோ’, ‘மறைந்திருந்து பார்க்கும்  மர்மம் என்ன’, ‘பட்டறை’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவர். நாயகியாக அக்ஷதா நடித்துள்ளார். இவர்களுடன் ஸ்ரீராம் சந்திரா, மனோஜ் நந்தன், பேனர்ஜி, செம்மக் சந்திரா, க்ராக் ஆர். பி. ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாய் கார்த்திக் இசையமைத்துள்ளார். அஞ்சி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத் தொகுப்பு – அவலா வெங்கடேஷ். தயாரிப்பு – ராஜசேகர் மற்றும் ஜேடி காசிம், எழுத்து, இயக்கம் – என்.எஸ்.சி.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வெளியாகியுள்ளது. இதன் தமிழ் வடிவம் தற்போது அமேசான் பிரைம் வீடியோ என்ற ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. 

எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான தலைப்பான ‘MM07′ என்பதன் விளக்கம் என்ன என்று கேட்டால், “70MM’ என்பதை திருப்பிப் போட்டால் என்ன வருமோ அதுதான்” என்கிறார் இயக்குநர்.

இந்த யுக்தியே படத்தின் ஒரு முக்கியமான டர்னிங் பாயிண்ட் என்பதால் அதையே படத்திற்குத் தலைப்பாக வைத்திருக்கிறோம்” என்கிறார் இயக்குநர்.

ஒரு திரையரங்கில் வரிசையாக கொலைகள் நடக்கின்றன. அந்தக் கொலைகளைச் செய்பவர் யார்..? என்ன காரணம்? என்பது புதிராக உள்ளது. பரபரப்பான காட்சிகளோடு சஸ்பென்ஸ் த்ரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது.

திரை அரங்கில் நடக்கும் கொலைகளுக்கும் திரையரங்கில் காட்சிப்படுத்தும் படத்தில் வரும் காட்சிகளுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அது என்ன என்பதுவரை மர்மமாக இருக்கும். இது முழுக்க முழுக்க ஒரு திகில் படமாக உருவாகிறது.

இதற்கான படப்பிடிப்பு முழுதும் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில்  நடைபெற்றுள்ளது. படத்தில் மூன்று பாடல் காட்சிகள் உள்பட அனைத்து காட்சிகளுமே அதே திரையரங்கில்தான் படமாக்கப்பட்டுள்ளது.

ஒரு திரையரங்கில் படத்தின் கதை நடந்தாலும் காட்சிகளில் நம்மை கவரும்படி அமைந்திருக்கும். படத்தின் கதையும், காட்சிகளும்  மொழி கடந்த உணர்வைத் தருவதால்  மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகி அனைத்து மக்களும் பார்க்கக் கூடிய வகையில் விறுவிறுப்பாகவும் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

Our Score