full screen background image

ஸ்ருதிஹாசனின் படப்பிடிப்புத் தளத்திற்கு வருகை தந்த சரிகா..!

ஸ்ருதிஹாசனின் படப்பிடிப்புத் தளத்திற்கு வருகை தந்த சரிகா..!

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் உருவாகும் இன்னமும் பெயரிடப்படாத படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

கேங்ஸ்டர்களின் உலகத்தைப் பற்றிய இந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் பற்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஸ்ருதிஹாசனின் அம்மாவான நடிகை சரிகா அங்கே வந்து மகளின் நடிப்பை பார்வையிட்டிருக்கிறார்.

படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த தன் தாயாரை அங்கு பணியாற்றிய அனைவருக்கும் தனித்தனியாக அறிமுகப்படுத்தினார் ஸ்ருதிஹாசன். படத்தில் தான் ஏற்றிருக்கும் கேரக்டரைப் பற்றியும், இயக்குநர் தன்னிடம் வேலை வாங்கும் நுட்பத்தையும் சரிகாவிடம் விவரித்தாராம்.

தன் மகளின் அர்ப்பணிப்புத் தன்மையுடன் கூடிய நடிப்பைப் பார்த்த சரிகா, படப்பிடிப்பு தளத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறார். படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்து தன்னை உற்சாகப்படுத்தியதற்காக நடிகை ஸ்ருதியும் அம்மா சரிகாவுக்கு நன்றி தெரிவித்தாராம்.

இது பற்றி நடிகை சரிகா பேசும்போது “மகேஷ் மஞ்சரேக்கர் போன்ற திறமையான கதை சொல்லிகளின் படைப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்புக் கொண்டது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம். இவர் போன்ற இயக்குநர்களின் வழிகாட்டலை ஸ்ருதி பின்பற்றினால் அவரின் திறமை மேலும் பளிச்சிடும்..” என்றார்.

Our Score