full screen background image

“என்னுடைய நிஜமான கேரக்டர்தான் ‘போர்’ படத்தின் ‘ரிஷிகா’ கதாப்பாத்திரம்” : நடிகை சஞ்சனா நடராஜன்!

“என்னுடைய நிஜமான கேரக்டர்தான் ‘போர்’ படத்தின் ‘ரிஷிகா’ கதாப்பாத்திரம்” : நடிகை சஞ்சனா நடராஜன்!

தமிழ் மொழியை நேர்த்தியாக பேசி, தனித்துவமான கதாபாத்திரங்களில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை சஞ்சனா நடராஜன்.

சென்ற 2023-ம் ஆண்டின் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தில் அவர் தனது சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றார். இப்போது அவர் தனது நடிப்பில் அடுத்து வரவிருக்கும் ‘போர்’ திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இந்தப் ‘போர்’ படத்தின் டீசரில் அவரது டிரெண்டி & ஃபேஷனபிள் தோற்றம் அவரது ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சனா ‘போர்’ படத்தில் தனது கதாபாத்திரத்தைப் பற்றி பேசுகையில், “இந்தப் ‘போர்’ படத்தின் கதை நிஜ சம்பவங்களின் அடிப்படையில் உருவானது. இந்தப் படத்தில் நான் ‘ரிஷிகா’ என்ற மருத்துவ மாணவியாக நடித்துள்ளேன். இந்த ‘ரிஷிகா’ கதாபாத்திரம் எனது நிஜ கேரக்டர் போலவேதான் அமைந்துள்ளது. 

நண்பர்கள் குழுவைச் சுற்றி சுழலும் இந்தப் படத்தின் கதையானது, அவர்களின் கடந்த கால சம்பவங்கள் எப்படி தற்போதைய வாழ்க்கையை பாதிக்கிறது என்பதைச் சொல்கிறது. இது அரசியல் விஷயங்களைப் பேசுவதோடு, சில சமூகப் பிரச்சினைகளையும் சொல்லி இருக்கிறது. படக் குழுவில் இருந்த அனைவருமே உற்சாகத்தோடு வேலை செய்தோம்.

இயக்குநர் பிஜாய் நம்பியாரும் படத்தை தெளிவான பார்வையோடு கொண்டு சென்றார். இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்…” என்றார் சஞ்சனா நடராஜன்.

Our Score