நடிகை ரெஜினா கேஸண்ட்ரா சென்ற ஆண்டு ‘Ek Ladki Ko Dekha Toh Aisa Laga’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்திருந்தார்.
விது வினோத் சோப்ராவின் தயாரிப்பில் ஷெல்லி சோப்ரா தர் இயக்கியிருந்த இந்தப் படத்தில் ரெஜினாவும், சோனம் கபூரும் லெஸ்பியன் காதலர்களாக நடித்திருந்தனர்.
படம் காதல் கதையில் உருவாகியிருந்தது. சோனம் கபூரின் தந்தையான அனில் கபூரும் அந்தப் படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் லெஸ்பியனாக நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் ரெஜினா அளித்த பேட்டியில், “ஒரு நடிகைன்னா எல்லாவித கேரக்டரும் செய்யணும். நல்ல கதாபாத்திரங்களில் நடிச்சு நல்ல பெயர் எடுக்கணும். இதுக்குத்தான் நானும் ஆசைப்படுறேன்.
இந்தில நான் நடிச்ச ‘ஏக் லட்கி கோ தேகா தோ அய்சா லகா’ என்ற படத்தில் சோனம் கபூருடன் லெஸ்பியனா நடிச்சிருந்தேன். ஆண், பெண் பேதமெல்லாம் இந்த ஜெனரேஷனுக்கு இல்ல. இப்ப இருக்குற சின்னப் பசங்க ரொம்ப மெச்சூர்டா இருக்காங்க. பெத்தவங்களுக்கு ஈஸியா புரிய வைக்குற அளவுக்கு அடுத்தத் தலைமுறையினரிடம் பாலினம் குறித்த புரிதல் இப்போ வந்திருச்சு.
ஆனால் எனக்குள்ள இருக்குற ஒரேயொரு குறை அந்த இந்திப் படத்துல என் கேரக்டரை சின்னது பண்ணினதுதான்..” என்று சொல்லியிருக்கிறார்.
தன் மகள் சோனம் கபூர் திருமணமானவர் என்பதால் லெஸ்பியன் சம்பந்தப்பட்ட காட்சிகளை அப்பா அனில் கபூர் கட் செய்ய வைத்ததுதான் ரெஜினா வெளியில் சொல்லாத ஒரு விஷயம்..!