full screen background image

“ரம்பா நல்லாத்தான் இருக்காங்க…” – குஷ்பு கொடுத்த சர்டிபிகேட்..!

“ரம்பா நல்லாத்தான் இருக்காங்க…” – குஷ்பு கொடுத்த சர்டிபிகேட்..!

தி.மு.க.வில் இருந்து விலகிய கையோடு கனடாவுக்கு சுற்றுலாவுக்குச் சென்றிருக்கும் நடிகை குஷ்பு.. அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

குஷ்பு கனடா வந்திருப்பதை அறிந்து அங்கே குடியிருக்கும் நடிகை ரம்பா குஷ்புவைத் தேடி வந்து சந்தித்திருக்கிறார். குஷ்புவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்தும் அளித்திருக்கிறார்.

குஷ்புவும், ரம்பாவும் நயகரா நீர்விழ்ச்சிக்குச் சென்று பார்த்திருக்கிறார்கள். இது குறித்து டிவிட்டரில் செய்தியை வெளியிட்ட குஷ்பு, ரம்பா எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கனடாவில் அமைதியாக வாழ்ந்து வருவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ரம்பா பற்றி சில மாதங்களுக்கு முன்பு சில பத்திரிகைகளில் தவறான செய்தி வெளிவந்ததற்கான பதிலை குஷ்பு இப்போது கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது..!

kushboo_ramba_002

Our Score