நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சூர்யா இந்தப் படத்தை 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் என்கிற தன்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறாராம்..
இந்த 2-டி என்பதற்கான விளக்கம், அவருடைய மகள் தியா மற்றும மகன் தேவ் ஆகியோரின் முதல் எழுத்தைக் குறிக்கிறதாம்.. இந்தப் படத்தின் கதைப்படி இதில் ஜோதிகாவும் நடித்தால் நன்றாக இருக்குமே என்றெண்ணித்தான் பாண்டிராஜ் சூர்யாவை அணுகியிருக்கிறார். கதையைக் கேட்டவுடன் ஆர்வமான சூர்யா தானே தயாரிப்பதாகச் சொல்லி பட வேலைகளைத் துவங்கச் சொல்லிவிட்டார். இதில் பாண்டிராஜின் பசங்க புரொடெக்சன்ஸ் நிறுவனமும் பார்ட்னராம்..
இது குழந்தைகளை மையமாகக் கொண்ட படமாம். இதில் பிந்து மாதவி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.
‘இது நம்ம ஆளு’ படத்தின் படப்பிடிப்பும் இன்னமும் பாக்கியிருக்கிறதாம். அதை முடித்தவுடன் இந்தப் படத்தின் வேலைகள் உடனேயே துவங்குமாம்..!
ஆனால் ஜோதிகா இந்தப் படத்தில் நடிப்பாரா என்பது இந்த நிமிடம்வரையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை..!