பரத்-ஆன் ஷீத்தல் நடிக்கும் புதிய திரைப்படம் ‘காளிதாஸ்’

பரத்-ஆன் ஷீத்தல் நடிக்கும் புதிய திரைப்படம் ‘காளிதாஸ்’

Leaping Horse Entertainment, Incredible Productions & DINA Studios ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் மணி தினகரன் மற்றும் எம்.எஸ்.சிவநேசன், வி.பார்கவி ஆகிய மூவரும் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘காளிதாஸ்.’  

இந்தப் படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகையான ஆன் ஷீத்தல் நடித்துள்ளார். இவர்களுடன் ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா, இசை – விஷால் சந்திரசேகர், பாடல்கள் – தாமரை, நிரஞ்சன் பாரதி, படத் தொகுப்பு – புவன் சீனிவாசன், மக்கள் தொடர்பு – யுவராஜ், விளம்பர வடிவமைப்பு – தண்டோரா, சபா டிசைன்ஸ், சண்டை இயக்கம் – மிராக்கிள் மைக்கேல்.

‘நாளைய இயக்குநர்’ தொடரின் மூன்றாவது சீசனில் 2-வது இடத்தை வென்ற ஸ்ரீசெந்தில் இப்படத்தினை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசும்போது, “இன்று பலர் தங்களுடைய குடும்பங்களில் அவர்கள் தவறவிடும் பாசம், பந்தம், உறவு அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி இப்படம் பேசும்.

சமீபகாலமாக கை பேசி உபயோகத்தினால் பல பிரச்சனைகள் உருவெடுக்கிறது. உதாரணமாக கை பேசியினால் குடும்பத்திற்குள் பிரச்சனை, பணியிடத்தில் பிரச்சனை என பல வகையான பிரச்சனைகள் தினம்தோறும் தொடர்ந்து வருகிறது.

அப்படிப்பட்ட கை பேசி பிரச்சனைகளில் ஒன்றை தேர்வு செய்து அதன் மூலம் நடக்கக் கூடிய சைபர் க்ரைம் பிரச்சினைகள், அதனைத் தொடர்ந்து நடக்கக் கூடிய தொடர் கொலைகளை கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிகர் பரத் காவல் துறை அதிகாரி கதாபாத்திரம் ஏற்று படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் மிக பெரிய ப்ளஸ், படத்தின் க்ளைமாக்ஸை யாராலும் யூகிக்கவே முடியாது. பரத்துக்கு இப்படம், தமிழ் சினிமாவில் ஒரு ரீ-என்ட்ரியாக இருக்கும்..” என்றார்.

Our Score