full screen background image

சரத்குமார் நடிப்பில் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் வெப் சீரீஸ் ‘இரை’

சரத்குமார் நடிப்பில் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் வெப் சீரீஸ் ‘இரை’

நடிகை ராதிகா சரத்குமாரின் RADAAN MEDIA WORKS’ வெப் சீரீஸ் தயாரிப்பில் இறங்கியிருக்கிறது.

Radaan Media Works நிறுவனம், கடந்த பல வருடங்களாக தமிழக பொழுதுபோக்கு துறையில், பல அரிய சாதனைகளை பல்வேறு தளங்களில் நிகழ்த்தி காட்டியிருக்கிறது.

குடும்ப பெண்கள் கொண்டாடும் தொலைக்காட்சி சீரியல்களில் தொடங்கி, டெலிஃபிலிம் மற்றும் முழு நீள திரைப்படங்கள்வரை பல வெற்றிகரமான படைப்புகளை தயாரித்து வழங்கியுள்ளது.

பல வெற்றிகளை தொடர்ச்சியாக சாத்தியமாக்கிய இந்நிறுவனம் தற்போது OTT தளத்தில் ‘இரை’ எனும் இணைய தொடர் மூலம் தன் புதிய பயணத்தை துவக்கியுள்ளது.

இந்த இணைய தொடரில் நடிகர் சரத்குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த இரை’ இணைய தொடருக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சசி கலை இயக்கம் செய்கிறார். சில்வா மாஸ்டர் சண்டை இயக்கத்தை மேற்கொள்கிறார். ஷான் லோகேஷ் படத் தொகுப்பு செய்கிறார்.

தூங்காவனம்’, ‘கடாரம் கொண்டான்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய  இயக்குநர் ராஜேஷ் M.செல்வா இந்த இணையத் தொடரினை இயக்குகிறார்.

ரசிகர்களை இருக்கையின் முனையில் கட்டிப் போடும், பரபர திருப்பங்கள் நிறைந்த க்ரைம் திரில்லராக இந்த இணைய தொடர் உருவாகவுள்ளது.

தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் இந்தத் தொடர் குறித்துப் பேசும்போது, “எங்கள் Radaan Media works நிறுவனம் குடும்ப ரசிகர்களின் ரசனையை முதன்மையாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும்.

கடந்த பல வருடங்களாக பொழுது போக்கு உலகின், பல்வேறு துறைகளில் குடும்பங்கள் இணைந்து கொண்டாடும், பல கதைகளை வழங்கி பல அற்புதமான வெற்றிகளை பெற்றுள்ளது இந்நிறுவனம்.

பல வித்தியாசமான படைப்புகளை இந்த தலைமுறையிலும் வழங்க, இந்த வெற்றிகள் பெரும் எங்களுக்கு பெரும் ஊக்கமாக இருந்து வருகிறது.

OTT தளத்தில்  எங்களது முதல் அறிமுக தயாரிப்பான இந்த இரை’ இணைய தொடர், எப்போதும் போல் குடும்ப ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும்படியான அனைத்து அம்சங்களும் பொருந்திய அற்புதமான கதையாகும்.

இந்த இணைய தொடர் க்ரைம் திரில்லர் வகையில் உருவானாலும், உறவுகள் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் அம்சங்களும் நிறைந்ததாக இருக்கும். சரத்குமார் அவர்கள் டிஜிட்டல் தளத்தில் எங்கள் நிறுவனம் மூலம் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சி.

திரில்லர் வகை படங்களில் தன் திறமையை பெரிய அளவில் நிரூபித்து காட்டிய, இயக்குநர் ராஜேஷ் M.செல்வா இந்த இணைய தொடரையும் மிக அற்புதமான படைப்பாக மாற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது..” என்றார்.

இந்த இணைய தொடர் படப்பிடிப்பில் அனைத்து வகை மருத்துவ சோதனைகளும் செய்யப்பட்டு 75 துணை நடிகர்கள், அரசு வழிகாட்டியுள்ள அனைத்து சுகாதார முன்னெடுப்புகளையும் கடைப்பிடித்து கலந்து கொண்டனர்.

Our Score