full screen background image

ஜீத்து ஜோஸப்-மோகன்லால் ஜோடி மீண்டும் இணையும் ’12th Man’ திரைப்படம்

ஜீத்து ஜோஸப்-மோகன்லால் ஜோடி மீண்டும் இணையும் ’12th Man’ திரைப்படம்

அந்தோணி பெரும்பாவூர்-மோகன்லால்-ஜீத்து ஜோஸப் ஜோடி மீண்டும் இணைகிறது.

மலையாளத்தின் டாப் மோஸ்ட் தயாரிப்பாளரான அந்தோணி பெரும்பாவூர் தயாரிப்பில் வெளியான திரைப்படம் திரிஷ்யம்’. உலக அளவில் மிக அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெயரை எடுத்தது இத்திரைப்படம்.

அண்மையில் அமேசான் ப்ரைம் தளத்தில் இவர்கள் கூட்டணியில் உருவான ‘திரிஷ்யம்-2’ படமும் மாபெரும் வெற்றியடைந்தது.

இதன் முதல் பாகம் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது இரண்டாவது பாகத்தையும் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது மீண்டும் இதே கூட்டணி இணைகிறது. இந்தப் படத்திற்கு 12th Man’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் அனுஸ்ரீ, அதிதி ரவி, லியோனா, வீணா நந்தகுமார், சைன் டாம் சாக்கோ, சைஜு குரூப், பிரியங்கா நாயர், ஷிவதா, சந்துநாத், சாந்தி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக ஒட்டு மொத்தப் படப்பிடிப்பையும் முடிக்க படக் குழு முடிவு செய்துள்ளதாக படத்தின் இயக்குநரான ஜீத்து ஜோஸப் தெரிவித்துள்ளார்.

Our Score