“குடிக்கு அடிமையாகிவிட்டேன் என்று புரளியைக் கிளப்பினார்கள்” – நடிகை நமீதாவின் கோபம்..!

“குடிக்கு அடிமையாகிவிட்டேன் என்று புரளியைக் கிளப்பினார்கள்” – நடிகை நமீதாவின் கோபம்..!

நடிகை நமீதா 2004-ம் ஆண்டில் ‘எங்கள் அண்ணா’ என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவரது உடல் எடை கணிசமாக கூடியது.

இதனால் அவருக்கான பட வாய்ப்புகள் குறைந்தன. பின்னர் தனது காதலர் வீரேந்திராவை திருமணம் செய்து கொண்டார். தற்போது உடல் எடையை பெருமளவு குறைத்துள்ளார் நமீதா. 

தனது உடல் எடை கூடிய, எடை குறைத்த இரண்டு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நமீதா, சினிமா வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் பற்றி எழுதியுள்ளார். 

நமீதா தான் எழுதிய அந்தப் பதிவில், “10 வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும் சில நிமிடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும் மன அழுத்தம் பற்றிய விழிப்புணர்வுக்காகவே இங்கே பதிவிட்டுள்ளேன்.

உடல் எடை கூடியபோது, எனக்கு அதிக மன அழுத்தமும் அசவுகரியமும் இருந்தது. யாருடனும் பழக முடியவில்லை. இரவில் தூக்கம் வரவில்லை. அதிக உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டேன். பீட்சாவையும் தினமும் சாப்பிட்டேன். இதனால் எனது உடலின் எடை கூடி எனது தோற்றமே மாறிவிட்டது.

கடைசியாக எனது உடலின் எடை 97 கிலோவுக்கு வந்தது. அப்போது சிலர் நான் மதுவுக்கு அடிமையாகி விட்டதாக பேசினர். ஆனால் எனக்கு சினைப்பை, மற்றும் தைராய்டு நோய்கள் இருந்தது எனக்குத்தான் தெரியும். தற்கொலை செய்து கொள்ளும் சிந்தனைகள்கூட எனக்கு அப்போது அதிகம் வந்தன. எனக்கான மன அமைதி கிடைக்கவில்லை. 

ஐந்தரை வருட மன அழுத்தத்துக்கு பிறகு இறுதியில் எனது கிருஷ்ணரையும் மகா மந்திராஸ் தியானத்தையும் கண்டுபிடித்தேன். டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்லவில்லை. தியானமும், எனது கடவுள் கிருஷ்ணரிடமும் நான் செலவிட்ட நேரம்தான் எனது உடலுக்கான சிகிச்சையாக அமைந்தது.

 இறுதியில் அமைதியையும், அன்பையும் நான் அங்கே கண்டுபிடித்தேன். நீங்கள் வெளியில் தேடும் விஷயங்கள் எல்லாமே உங்களுக்குள் இருக்கிறது என்பதுதான் எனக்குக் கிடைத்த ஆன்மீகம் சொல்லிய நீதி…” என்று எழுதியுள்ளார்.

Our Score