இன்றைக்கு நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் நடிகை நளினி தலைமையிலான அணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
தலைவராக நளினியே தேர்வு செய்யப்பட்டுள்ளார். 273 வாக்குகளை பெற்று 50 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போதைய தலைவர் ராஜேந்திரனை தோற்கடித்துள்ளார் நளினி.
செயலாளராக பூவிலங்கு மோகனும், பொருளாளராக வி.டி.தினகரனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராஜ்காந்த், மனோபாலா ஆகிய இருவரும் துணைத் தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளனர். பாபூஸ், பரத், கன்யா பாரதி, சாதனா ஆகிய நால்வரும் இணைச் செயலாளர்களாக தேர்வாகியுள்ளனர். இவர்கள் அனைவருமே நளினி அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்குழு உறுப்பினர்களுக்கான போட்டியில் மட்டும் 3 உறுப்பினர்களை இழந்து மீதமிருந்த 11 இடங்களையும் நளினி அணியே கைப்பற்றியுள்ளது.
ரேகா சுரேஷ், பிரேம்குமார், நித்திஷ் ஆகிய நளினி அணியைச் சேர்ந்த மூவரும் தோற்றுப் போயுள்ளனர். ராஜேந்திரன் அணியில் போட்டியிட்ட நடிகை சாந்தி வில்லியம்ஸ், நடிகர்கள் குமரேசன், பிர்லா ஆகிய மூவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
வென்றவர்களுக்கு எமது வாழ்த்துகள்..!