அரை டிரவுசருடன் வந்து குத்துவிளக்கேற்றிய நடிகை பிரியா ஆனந்த்..!

அரை டிரவுசருடன் வந்து குத்துவிளக்கேற்றிய நடிகை பிரியா ஆனந்த்..!

அனைத்து சம்பவங்களுக்கும் ஒரு டிரெஸ்ஸிங் கோட் இருக்கிறது என்பார்கள். இது தனி மனி உரிமையையும் தாண்டிய காலச்சாரம் சார்ந்த விஷயம்..

குழந்தையாக ஒரு உடை.. பள்ளியில் ஒரு உடை.. வீட்டில் இருக்கும்போது ஒரு உடை.. வெளியில் செல்லும்போது ஒரு உடை.. திருமணம் போன்ற விசேஷங்களில் ஒரு உடை.. என்பது மக்களுக்கு பொதுவான விதி.. கீழ்ப்படிந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை.. ஆனால் இதுதான் அந்த நிகழ்வுகளுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்பார்கள்.

actress priya anand-53

நடிகை பிரியா ஆனந்த் சமீபத்தில் சென்னையில், அமைந்தகரை அருகே நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்திருக்கும் பேண்ட்லூன் என்கிற ஆடை விற்பனை மையத்தைக் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்திருக்கும் புகைப்படங்களை பார்க்கையில், இதெல்லாம் எங்களை மாதிரி பிரபலங்களுக்கு இல்லை என்று அவர் சொல்லாமல் சொல்வது போல தோன்றுகிறது..!

அவரவர் விருப்பப்படி ஆடை அணியலாம் என்பது சட்டம் நமக்குக் கொடுத்துள்ள தனி மனித உரிமைப்படி சரிதான்.. இதேபோல் பிரியா ஆனந்தின் திருமணத்தில் யாரோ ஒருவர் வெறும் பனியன், டிரவுசர் மட்டும் அணிந்து கொண்டு பரிசு கொடுக்க வந்தால் பிரியா ஆனந்த் என்ன செய்வார்..?

யோசிங்கம்மா.. யோசிங்க..!

Our Score