‘சாட்டை’ படத்தில் அறிமுகமானவர் மகிமா. அதற்கு பிறகு ‘என்னமோ நடக்குது’ படத்தில் நடித்து சிறப்பான பெயர் பெற்ற மகிமா தற்போது வெளிவரவுள்ள ‘மொசக்குட்டி’, ‘புறவி எண்’, ‘அகத்திணை’ போன்ற படங்களிலும் நடித்துக் கொண்டிருகிறார்.
இப்போதைய சினிமாக்களில் ஹீரோக்களுக்கே இரட்டை வேடத்துடன் நடிப்பதே அபூர்வம்.. இதில் ஹீரோயினுக்கு அதிலும் அதிகம் பேசப்படாத ஹீரோயினுக்கே இரட்டை வேடம் கிடைப்பது அதிசயம்தானே.. இந்த மகிமாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது..!
தற்போது சமுத்திரகனி இயக்கும் வித்தியாசமான கதைக் களம் கொண்ட ‘கிட்ணா’ என்ற படத்தில் மகிமா இரட்டை வேடமேற்று நடிக்கிறார்.
இது பற்றி சொல்லும் மகிமா, “சாட்டை’ படத்தில் நடித்தபோது சமுத்திரகனி சார், நடிப்பு பற்றி எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். அப்படிப்பட்ட சிறந்த இயக்குனரான சமுத்திரகனி சார் படத்தில் இரட்டை வேடத்தில் கதாநாயகியாக நடிப்பது எனக்கு பெருமையான விஷயம்…” என்கிறார் மகிமா.
இந்த ‘கிட்ணா’ படத்தில் அமலாபால் நடிக்க வேண்டிய கேரக்டர் இது..! அவர் கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டதால், மகிமாவுக்கு அதிர்ஷ்டம் அழைத்துவிட்டது..!