கடந்த பிப்ரவரி மாதமே எழுந்த சர்ச்சை இது. பிரபல நடிகை லிஸியும், அவருடைய கணவரான இயக்குநர் பிரியதர்ஷனும் பிரிகிறார்கள் என்ற செய்தி எழும்பியது.. பின்பு இத்தம்பதிகளின் மிக நெருங்கிய குடும்ப நண்பர்களான மோகன்லாலும் அவரது மனைவியும் சமரசம் செய்து வைத்ததால் பிரச்சினை முடிந்தது என்று அறிக்கையும் வெளியிட்டார் நடிகை லிஸி.
ஆனால் இன்றைக்கு மாலைதான் நடிகை லிஸி இப்படியொரு செய்தியை பத்திரிகைளுக்கு அனுப்பியிருக்கிறார்.
“24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நானும் திரு.பிரியதர்ஷன் அவர்களும் முழு மனதுடன் பிரிய முடிவெடுத்துள்ளோம் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் பிரிவை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்துள்ளேன். எங்களது இந்த முடிவை எங்களின் குழந்தைகளும், நண்பர்களூம் அறிவார்கள். இந்த கடினமான காலத்தில் தாங்கள் அனைவரும் எங்களின் கவலை அறிந்து, எங்களின் தனியுரிமை மதித்து செயல்படமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு லிஸி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இடையில் என்ன நடந்ததோ யாருக்குத் தெரியும்..?









