“சராசரியான வாலிபன் மற்றும் அப்பாவியான கதாபாத்திரங்களில் சோபிக்கும் ஜெய் சமீபமாக அதிரடி ஆக்க்ஷன் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். எந்த கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதை சவாலாக ஏற்று செவ்வனே முடிக்கும் இவருடைய அடுத்த படம் ஒரு action -Thriller..” என்கிறார் இயக்குனர் மணிமாறன்.
இந்தப் படத்தில் ஜெய் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரும் ‘புகழ்’தான்.
தயாரிப்பாளர் சுஷாந்த் இந்த படத்தை கூறும்போது “நம் வாழ்வில் நாம் எப்போதும் அறிந்தோ, அறியாமலோ ஜெயிக்க வாய்ப்பில்லை என கருதப்படுபவர் ஜெயிக்க வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. அவர்களின் வெற்றியில் நாம் நம்மை காண விழைவது உண்டு. அப்படி நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒரு நபரை பற்றிய கதைதான் இந்தப் படம்..” என்றார்.
“கதாநாயகிக்கான தேர்வு நடைபெறும்போது பல்வேறு பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. ஆனால் இறுதியில் அந்த பாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் ‘இவன் வேற மாதிரி’ படத்தில் நடித்த சுரபிதான். அவர் அந்த பாத்திரத்துக்கு மிக சரியான தேர்வு எனக் கூறலாம். ‘புகழ்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து, இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது. வெற்றி வேண்டும் என முனைப்போடு செயல்படுகிறோம்..” என்கிறார் இயக்குனர் மணிமாறன்.
film department என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சுஷாந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜ் தயாரிக்கும் இந்த படத்தை Radiance media சார்பில் வெளியிடவிருப்பவர் தயாரிப்பாளர் வருண் மணியன்.
இந்தப் படக் குழுவினர் தங்களது படத்தைப் பற்றி இப்படி செய்தியனுப்பியிருந்தாலும், நடந்திருப்பது வேறு என்கிறது கோடம்பாக்கத்து ஒற்றர் படை.
இந்தப் படத்தின் கதாநாயகி தேர்வில் முதலில் இருந்தவர் திரிஷா. தன் மனம் கவர்ந்த மங்கை தன் தயாரிப்பிலேயே நடிப்பதா என்று கடைசி நிமிடத்தில் கலங்கிய வருங்கால மணாளன் வருண் மணியன் சட்டென்று கதாநாயகியை மாற்றிவிட்டதாக கோடம்பாக்கம் முழுவதும் இப்போது பேச்சு..!
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..!
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது..!
எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்..!