full screen background image

நடிகை குஷ்பூவின் சொத்து மதிப்பு எவ்வளவு..?

நடிகை குஷ்பூவின் சொத்து மதிப்பு எவ்வளவு..?

சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரபல நடிகையான குஷ்பு நேற்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு தாக்கலின்போது நடிகை குஷ்பு தனது சொத்துக்கள் பற்றிய விவரங்களையும் சமர்ப்பித்தார்.

தனது கையிருப்பாக 2 லட்சத்து 15 ஆயிரத்து 600 ரூபாயும், தனது கணவர் சுந்தர்.சி.யின் கையிருப்பாக 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய பெயரில் ரூ.3 கோடியே 42 லட்சம் மதிப்புள்ள 8.55 கிலோ தங்கம், 78 கிலோ வெள்ளி, 33 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பார்ச்சூனர் டோயட்டா காரும், ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள மாருதி ஸ்விப்ட் காரும் இருப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.

கணவர் சுந்தர்.சி.யின் பெயரில் 3 கார்கள், 495 கிராம் தங்கம், 9 கிலோ வெள்ளி ஆகியவையும் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குஷ்பு தனது பெயரில் மொத்தம் 4 கோடியே 55 லட்சத்து 45 ஆயிரத்து 693 மதிப்பில் அசையும் சொத்துக்களும், தனது கணவரான இயக்குநர் சுந்தர்.சி.யின் பெயரில் ரூ.1 கோடியே 83 லட்சத்து 98 ஆயிரத்து 58 மதிப்பிலான அசையும் சொத்துக்களும் இருப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், தனது முதல் குழந்தையின் பெயரில் 11 லட்சத்து 89 ஆயிரத்து 304 மதிப்பிலும், இரண்டாவது குழந்தை பெயரில் ரூ.12 லட்சத்து 560 மதிப்பிலும் அசையும் சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது பெயரில் செங்கல்பட்டு முட்டுக்காடு பகுதியில் சொகுசு பங்களா, திருக்கழுகுன்றத்தில் பங்களா, கணவர் பெயரில் மேடவாக்கத்தில் பங்களா, கோயம்புத்தூரில் பங்களா என தனது பெயரில் ரூ.17 கோடியே 99 லட்சம் 87 ஆயிரத்து 500 மதிப்பிலான அசையா சொத்துக்களும், கணவர் பெயரில் ரூ.16 கோடியே 57 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும்  உள்ளதாக கூறியுள்ளார் குஷ்பூ.

மேலும் தனது பெயரில் ரூ.3 கோடியே 45 லட்சத்து 13 ஆயிரத்து 950 மதிப்பிலும், கணவர் பெயரில் 55 லட்சத்து 55 ஆயிரத்து 939 ரூபாய் மதிப்பில் கடன்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் குஷ்பூ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குஷ்பூ 8-ம் வகுப்புவரையிலுமே படித்ததாகத் தெரிவித்துள்ளார். தன் மீது தமிழகத்தில் 4 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

Our Score