சமந்தா-நாக சைதன்யா பிரிவுக்கு அமீர்கான்தான் காரணம்-நடிகை கங்கனா ரணாவத் குற்றச்சாட்டு

சமந்தா-நாக சைதன்யா பிரிவுக்கு அமீர்கான்தான் காரணம்-நடிகை கங்கனா ரணாவத் குற்றச்சாட்டு

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் “தானும், நாக சைதன்யாவும் கணவன்-மனைவி என்ற பந்தத்தில் இருந்து பிரிகிறோம்” என்று கடந்த அக்டோபர் 2-ம் தேதியன்று சமந்தா வெளிப்படையாக தெரிவித்துவிட்டார்.

இவர்களின் இந்தப் பிரிவுக்குப் பின்னால் பாலிவுட்டின் பிரபலமான சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் இருக்கிறார்” என்று சர்ச்சை நடிகையான கங்கனா ரனாவத் கூறியிருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் எழுதியிருக்கிறார் கங்கனா.

அதில், “தென்னிந்திய நடிகர் ஒருவர் திடீரென்று தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள்தான் ஆகிறது. முன்னதாக இருவரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்துள்ளனர்.

அந்த நடிகர் பாலிவுட்டின் விவாகரத்து நிபுணரான சூப்பர் ஸ்டார் நடிகருடன் தொடர்பில் இருக்கிறார். அந்த சூப்பர் ஸ்டார் பல பெண்கள், குழந்தைகளின் வாழ்க்கையை நாசம் செய்தவர். அவர்தான் தற்போது அந்த நடிகருக்கு ஆதரவாக இருக்கிறார். நான் யாரைப் பற்றிப் பேசுகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும்…” என்று எழுதியிருக்கிறார் கங்கனா ரணாவத்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார்’ என்று கங்கனா குறிப்பிடுவது அமீர்கானைத்தான் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான்.

அமீர்கானின் ‘லால் சிங் சட்டா’ படத்தில் அவருக்கு நண்பராக நடித்துள்ளார் நாக சைதன்யா. மேலும் அமீர்கான் ஹைதராபாத்தில் நடந்த நாக சைதன்யாவின் லவ் ஸ்டோரி பட விழாவிலும் கலந்து கொண்டார். அன்றைய நாளில் அமீர்கானுக்கு நாகர்ஜுனாவும், நாக சைதன்யாவும் விருந்து கொடுத்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
Our Score