ஒரு நடிகையை அறிமுகப்படுத்தும்போது அழகான நடிகை என்ற வரையரைக்குள் மட்டும் நிறுத்தி விடக்கூடாது. நன்றாக நடிக்கக் கூடிய அழகான நடிகை என்றுதான் சொல்ல வேண்டும். சொல்ல வேண்டும் என்பதைவிட அப்படிச் சொல்வதற்கான தகுதியோடு அந்த நடிகையும் இருக்க வேண்டும்.
அப்படியொரு அழகுடன் கூடிய நடிப்புத் திறமையுடன் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார் நடிகை ஜெசிகா பவ்லின். அறிமுகமே தேவையில்லாத திருமுகம் கொண்டவர் இவர்.
ஏற்கெனவே ‘துப்பறிவாளன்’ படத்தில் கவனிக்கக் கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ‘ராட்சசன்’ படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தன் நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருந்தார்.
தற்போது நடிகர் சூரியின் தங்கையாக சுசீந்திரன் இயக்கும் ‘ஏஞ்சலினா’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்திருக்கும் ஜெசிகா பவ்லின் தற்போது ‘ஏகாலி’ படத்தில் கதாநாயகியாக பிரமோஷன் பெற்றிருக்கிறார்.
‘ஏகாலி’ திரைப்படம் வெளியானவுடன் பெரும் கதாநாயகிகளின் வரிசையில் நிச்சயம் தானும் ஒரு இடத்தைப் பிடிப்போம் என்கிற ஆவலுடன் காத்திருக்கிறார் ஜெசிகா. அந்த நம்பிக்கையைத் தரும்வகையில்தான் ‘ஏகாலி’ திரைப்படமும், படத்தில் அவரது நடிப்பும் சிறப்பாக வந்திருக்கிறதாம்.