2000 முதலைகளுடன் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’

2000 முதலைகளுடன் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’

ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை.’

இந்தப் படத்தில் முருகானந்தம், ‘ஜெமினி’ ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா, ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – M.P.சிவகுமார், இசை – பால கணேஷ், படத் தொகுப்பு – G.V.சோழன், விளம்பர வடிவமைப்பு  – அயனன், தயாரிப்பு – ஜெமினி ராகவா, இணை தயாரிப்பு – க.முருகானந்தம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  K.S.முத்து மனோகரன்.

படம் பற்றி இயக்குநர் முத்து மனோகரன் பேசும்போது, “இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம்.

ஒரு ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டும்தான் சிதையும். ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் சமுதாயமே பாதிக்கப்படும் என்ற கருத்தை இந்தப் படத்தில் முன் வைத்திருக்கிறோம்.

அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்யத் தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. 

IMG_0437

IMG_0445

IMG_0448

IMG_0564

இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமும் இதுதான். ஒரு கோடிக்கும் அதிகமாக பணத்தை செலவிட்டு  2000 முதலைகளை 15 நாட்களாக ஒரே இடத்தில் தங்க வைத்து அவைகளுக்கு உணவாக சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை டன் கணக்கில் போட்டு அவைகளை தண்ணீருக்குள் இருந்து வெளியில் வரவைத்து மிகவும் சிரமப்பட்டு காட்சிகளை படமாக்கியிருக்கிறோம்.

IMG_9572

கிளைமாக்ஸ் காட்சியில் அனைத்து முதலைகளும் ஒன்றாக சேர்ந்து வருவது போல் ஒரு காட்சி இருக்கிறது அந்த காட்சியை திரையில் பார்க்க படு பயங்கரமாக இருக்கும் அதுதான் இந்த படத்தின் ஹைலைட் காட்சி. படம் விரைவில் வெளியாக உள்ளது…” என்றார் இயக்குநர்.

 

Our Score