full screen background image

‘பலூன்’ படத்தின் இன்னொரு ஹீரோயினாகிறார் ஜனனி..!

‘பலூன்’ படத்தின் இன்னொரு ஹீரோயினாகிறார் ஜனனி..!

சிறந்த கலைஞர்கள், திறம் படைத்த தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகிய இரண்டும்தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு ஆணிவேராக செயல்படுகிறது. அப்படிப்பட்ட வலுவான கலைஞர்களை கொண்டு உருவாகி வரும் திரைப்படம்தான்   ’70 எம் எம்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள்  டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான திலீப் சுப்பராயன் இருவரும் இணைந்து தயாரித்து வரும் ‘பலூன்’.

இந்தப் படத்தில் ஜெய் – அஞ்சலி இருவரும் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பது பலூன் படத்திற்கு கூடுதல் பலம்.  தற்போது நடிகை ஜனனியை படத்தின் மற்றொரு கதாநாயகியாக அறிவித்துள்ளது மேலும் சிறப்பம்சமாகும்.

“அனைவரையும் ஈர்க்க கூடிய கண்கள்தான் ஜனனியின்  பலமே. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை தன்னுடைய கண்கள் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தக் கூடிய நடிகை ஜனனி எங்களின் ‘பலூன்’ படத்தின் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அவரது பங்களிப்பு எங்களின் படத்திற்கு கூடுதல் மதிப்பை தரும் என பெரிதும் நம்புகிறோம். வணீக ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற தேவையான எல்லா சிறப்பம்சங்களையும் எங்களின் ‘பலூன்’ திரைப்படத்தில் உள்ளடக்க முயற்சி செய்து வருகிறோம்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘பலூன்’ படத்தின் இயக்குநரான சினிஷ்.

‘பலூன்’ திரைப்படத்திற்காக சென்னையில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான செலவில் ஒரு அரங்கம் அமைக்கப்பட்டு, அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Our Score